ஆன்மீக விஞ்ஞானம் பகுதி இரண்டு
அதி காலையிலும் மாலையிலும் பலர் சாலையில் கையை வீசிக்கொண்டு வேகமாக நடந்து செல்வதைப் பார்க்கிறோம். ஏன் என்று கேட்டால் டாக்டர் நடக்கவேண்டும் என்று சொன்னார் .அதனால் நடக்கிறோம் என்கிறார்கள். இது நோய் வந்தபின் செய்வது. .ஆனால் நம்முடைய முன்னோர்கள் ஆலயத்தில் நவ கிரத்தை 108 சுற்று சுற்றிவா என்றார்கள். இது நோய் வருமுன் காத்தது. இந்தச் செயல் ஆன்மீகத்தில் விஞ்ஞானம்.
கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் , ஏகாதசி விரதம் போன்றவை ஏன் தெரியுமா? விரதம் இறந்தால் நம் உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்பெல்லாம் கரைந்து போகும் அதற்காக விரதம்.
ராக்கெட்டில் மனிதனை சந்திர மண்டலத்திற்கு அனுப்பியதாகப் பெருமை பேசுகிறது விஞ்ஞானம். திரிசங்கு என்ற மன்னனை இந்திர லோகத்திற்கே விசுவாமித்ரர் என்ற முனிவர் அனுப்பியதாக ஆன்மிகம் சொல்கிறதே.இந்திர லோகம் உண்டா இல்லையா என்பதல்ல ; மனிதன் இந்த பூமியிலிருந்து வேறு மண்டலம் செல்லமுடியும் என்ற ஆன்மிகம் விக்ஞானத்திற்கு எவ்வளவோ காலம்முந்தியது. ரஷ்யா அந்தரத்தில் ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைத்துள்ளதாக விக்ஞானம் பெருமைப் படலாம். திரிசங்கு மன்னனை அந்தரத்தில் நிறுத்தியதாக ஆன்மிகம் சொல்கிறதே. மனிதன் அந்தரத்தில் நிற்பது புதியதல்ல.பூமியிலிருந்து வேறு கிரகத்திற்குச் செல்வதும் வருவதும் விக்ஞானத்திற்குப் பெருமையாக இருக்கலாம். கேவலம் சிற்றின்பத்திற்காக தேவேந்திரன் மேல் லோகத்திலிருந்து பூலோகம் வந்தது ஆன்மீகத்தின் அறிவு விளக்கம். எங்கோ நடப்பதை இன்று தொலைக் காட்சியில் பார்க்கிறோம் .மகா பாரதத்தில் அஸ்தினாபுரத்து மாளிகையில் துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவுகிறான்.அவள் வேறு வழியின்றி கண்ணா என்று குரல் கொடுக்கிறாள். துவாரகையில் கண்ணன் அந்தக் காட்சியை அங்கிருந்தே கண்டது மட்டுமல்ல அங்கிருந்தே த்ரோவ்பதிக்குத் துகிலும் கொடுக்கிறான். டி வி வந்துவிட்டது ஆனால் துன்பப் படுபவற்கு நாம் இருக்கும் இடத்தில் இருந்தே எதையும் தரும் நாள் வரவில்லையே. விக்ஞானம் இன்னும் வளர வேண்டும்.தஞ்சாவூர் கோபுரத்தின் மீதுள்ள விதானம் 72 டன் எடை உள்ளதாம்.இப்போது உள்ள நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி அந்த விமானத்தை மேலே ஏற்றினார்கள். இது ஆன்மீகத்தின் சாதனை அல்லவா வள்ளலாரும் வடலூர் தருமச் சாலையில் ஒரு திரை இட்டு சிதம்பர ஆருத்ரா தரிசனத்தைக் காட்டியுள்ளாரே இது ஆன்மீகத்தின் உயர்வு. எத்தனையோ வியாதிகட்கு இன்னும் விக்ஞானம் மருந்து கண்டுபிடிக்கவில்லை ஆனால் திருநீறு கொடுத்தே வள்ளலார் மற்றும் ஆன்மீகப் பெரியார்கள் தீராத வியாதி எல்லாம் தீர்த்து வைத்திருக்கின்றார்களே. எனவே விக்ஞானம் வளரட்டும். ஆன்மிகம் எதற்கும் குறைந்ததல்ல.
Write a comment