புற நடுவொடு கடை புனர்ப்பித்து ஒரு முதல் அறம் உற வகுத்த அருட்பெருஞ்சோதி
இந்த வரிக்கு என்ன பொருள் என்று சிந்திப்போம்.
வள்ளலாரின் உரைநடை இதற்குச் சான்று:
அகம் என்பது ஆன்மா. அகப்புறம் என்பது ஜீவன். புறம் என்பது கரணம். புறப்புறம் என்பது இந்திரியங்கள். (உரைநடையில் கடவுள் காரியப்படும் இடம் என்ற தலைப்பு)
மனம் நினைக்கும் தொழில் உடையது. புத்தி என்பது விசாரிக்கும் தொழிலை உடையது. சித்தம் தீர்மானிக்கும். அகங்காரம் செயல் படுத்தும்.
புறம் என்பது கரணங்கள் அதாவது மனம், புத்தி, சித்தம் , அகங்காரம்,உள்ளம் ஆகிய ஐந்துமாம். இதில் puranadu என்பது சித்தம். கடை என்பது உள்ளமாகிய அறிவு. ஒரு முதல் என்பது நல்ல மனம். புறநடுவொடு எதையும் தீர்மானிக்கும் சித்தத்துடன் கடை புணர்ப்பித்து அறிவைச் சேர்த்து ஒருமுதலாகிய நல்ல மனம் அறமுற தரும வழியை அடையுமாறு வகுத்த செய்வித்த அருட்பெருஞ்சோதி.