SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
YAAR NALLA GURU. YAARAI NAAM GURUVAAGA ETRUKKOLVADHU

ஒரு நல்ல குருவிற்கு என்னென்nathagudhigal வேண்டும்? அருட்பெருஞ்சோதி அகவல் மூலமாக வள்ளலார் தரும் விளக்கம்.
பரமுடன் அபரம் பகர் நிலை இவை எனத் திரமுற அருளிய திருவருட் குருவே வரி எண் 1040
மதி நிலை ரவியின் வளர் நிலை அனலின் திதி நிலை அனைத்தும் தரித்த சற்குருவே
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் குணமுறத் தெறித்து உட்குலவு சற்குguruveருவே
பதி நிலை பசு நிலை பாச நிலைஎலாம் மதியுறத் தெறித்து உள் வயங்கு சற்குருவே
பிரம ரகசியம் பேசி என் உளத்தே தரமுற விளங்கும் சாந்த சற்குருவே
பரம ரகசியம் பகர்ந்து எனதுளத்தே வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே ........................................................1050
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே நவநிலை காட்டிய ஞான சற்குருவே
சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுவதும் அத்தகை தரித்த அருட்சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித்து என்னுள்ளே வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே ...................................1060
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே உய்பவை அளித்து என்னுள் ஓங்கு சற்குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே
சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் மெய்த்தகை அளித்தெனுள் விளங்கு சற்குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம் வல்லான் என எனை வைத்த சற்குருவே ..........................................1070
1 பரம் என்று சொல்லப்படுவதும் அபரம் என்று சொல்லப்படுவதும் இந்த நிலைதான் என்று மனதில் நன்கு வளங்கும்படித் தெரிவிக்கவேண்டும்.
2 சந்திரனின் நிலை, சூரியனின் வளர் நிலை, அனலைக் கார்த்துக்கொள்ளும் நிலை அனைத்தும் தெரிவிக்க வேண்டும்
3 நம்முடைய உடம்பில் உள்ள பூத கணங்களின் நிலை அவற்றின் மைய நிலை அனைத்தும் விளக்க வேண்டும்
4 பதி, பசு, பாசம் இவை எல்லாம் அறிவில் நன்கு படும்படிச் சொல்லவேண்டும்
5 பிரம்ம ரகசியம், பரம ரகசியம், சிவ ரகசியம் என்பன எல்லாம் என்ன என்றும் சொல்லவேண்டும்
6 சத்தியல் சித்தியல் அனைத்தும் தெரிவிக்க வேண்டும்
7 அறிபவை என்பது நெற்றிக்கண்ணைத் திறக்கும் தீக்ஷை அறிவிக்க வேண்டும்
8 அடுத்ததாக வரக்கூடிய நாத அனுபவத்தையும் அதனைத் தொடரும் காட்சி அனுபவத்தையும் விளக்கவேண்டும்
9 பின்னர் நான் செய்ய வேண்டியவை எல்லாம் நான் செய்யும்படி செய்வித்து நான் வுய்யுமாறு அளித்து என்னுள் ஓங்கவேண்டும்
10 என்னைச் சாகாமல் வாழ வைக்கக்கூடிய அமுதத்தை நான் உண்ணும்படி செய்வித்து எனது பண்பினில் விளங்கவேண்டும்.
11 சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து என்னை விட்டு விலகாத ஒரு பொருளை என்கரத்தில் தரவேண்டும்.
12 சத்தியமாகிய சிவ சித்திகள் அனைத்தையும் நான் உண்மையாக அடையுமாறு செய்யவேண்டும்.
13 எல்லா நிலைகளிலும் என்னை ஏற்றி சித்தெல்லாம் வல்லனாக என்னைச் செய்விக்கவேண்டும். இவர்தான் நல்ல குரு.