சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களில் சிலர் சமயத் தெய்வங்களையும் வழிபாடு செய்வதுடன் வள்ளலாரையும் வணங்குகிறார்கள்.சுத்த சன்மார்கிகள் என்று தங்களை சொல்லிக்கொள்வோர் சிலர் சன்மார்கத்தில் இருந்துகொண்டே திரு நீறு அணிபவர்களையும் , வள்ளலாரின் உருவச் சிலையையோ அல்லது வள்ளலாரின் படத்தையோ வணங்குகின்றவர்களையும் சமய சன்மார்கிகள் என்று சொல்கிறார்கள்..தீபத்தை மட்டும் வணங்குகின்றவர்கள்தான் சுத்த சன்மார்கிகளாம்.வள்ளலார் அவ்வாறு சொல்லியிருக்கின்றாரா?சமய சன்மார்க்கம் என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கம்தான் என்ன?சுத்த சன்மார்கத்திற்கு நேரடியாக வந்துவிட முடியுமா?வள்ளலார் கூறுவது என்ன? முதலில் சமய சன்மார்க்கம், அடுத்து மத சன்மார்க்கம் , பின்னர்தான் சுத்த சன்மார்க்கம். வள்ளலார் கூறியுள்ள சமய சன்மார்கத்தின் இயல்புதான் என்ன?
கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம்,ஆகியவைதான் சமய சன்மார்கத்தின் இயல்புகள். இவை வாச்சியார்த்தமாகி சொரூபமாக மாறுவதே சமய சன்மார்கத்தின் லட்சியம்.. இந்த ஆறு குணங்களும் முழுமையாக அடைந்தவரே வள்ளலாரின் கருத்தின்படி சமய சன்மார்கி ஆவார்.இந்த அருமையான குணங்கள் எல்லாம் வரப்பெற்றவரே சமய என்றால் இதில் இந்த குணமும் வராமல் தன்னை சுத்த சன்மார்கி என்று சொல்லிக்கொள்வோரை என்னவென்று கூறுவது. நாம் அனைவரும் முதலில் வள்ளலார் காட்டியுள்ள சமய சன்மார்கி ஆகலாமே
Write a comment