SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
NAAN SEIDHA BOOJAI NIRAIVUTRADHU

நமது புருவமத்தி என்று சொல்லக்கூடிய திருச் சிற்றம்பலத்தில் பேரொளியின் நடனத்தை நாம் முதலில் காணவேண்டும்.அந்தக் காட்சியைக் கண்ட பிறகு நாம் நினைத்தை எல்லாம் சாதிக்க முடியும் அந்த நிலையில்தான் நாம் உண்மையான இன்பத்தை அடைவோம்.குளிர்ச்சியான மிக மிகச் சிறந்ததான அமுதத்தை நாம் உண்ணவேண்டும்.அமுதம் உண்டவர்கள் சாவதில்லை.முடிவாக இறைவனை நாம் நேரில் காணவேண்டும். இறைவனை கண்டுவிட்டால் நம் பூஜை நிறைந்து விட்டது என்பது உண்மை. ஆதாரம் இதோ அருட்பாவில் காண்க.

பண்ணிய பூஜை நிறைந்தது திருச் சிற்றம்பல நடம் கண்டு

எண்ணிய எண்ணம் பலித்தது மெய் இன்பம் எய்தியது ஓர்

தண்ணியல் ஆர் அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான்

நண்ணிய புண்ணியம் என்னுரைக்கேன் இந்த நானிலத்தே (அருட்பா)