SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
POOJA MURAI WAS CHANGEWD BY SIVAADHDHAARIYAAR.IT WAS CONDEMNED BY SANGATHTHAAR.

1896 ம்ஆண்டு அப்போதிருந்த சன்மார்க்க சங்கத்தார் வெளியிட்ட டிரஸ்டி மறுப்பு என்ற அறிவிப்பின் முக்கியமான பகுதி:
வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொள்ளும் சில தினத்திற்கு முன் மேற்படி சபையை மூடிவிட்டு சாவியைக் கொண்டு வந்து கொடுக்கும்படி வாங்கிக்கொண்டு ஆண்ட வர் வருங்காலத்தில் சபையானது தானே திறந்துகொள்ளும் , அப்போது அது அற்புதமான கட்டடமாகத் தோன்றும்.அப்போது எல்லா சித்திகளும் நடக்கும் என்றார்கள், வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டபின் மேற்படி சபையானது மூன்று வருஷம் வரையில் மூடி இருந்தது. அதை என்னத்திற்கு மூடி வைக்கச் சொன்னார்களோ அது அந்தத் திருவுள்ளத்திற்கே தெரியும். அப்படி இருக்க வெகுதானிய வருஷம் சித்திரை மாதம் முதல் தேதியில் அங்கிருந்த சாலை அபிமானிகளில் ஆறு பேர் கூடி சபையைத் திறந்து பிரதி தினமும் தோத்திரமும் பிரதி மாத பூசத்திற்கு தீப அலங்காரத்தோடு தோத்திரமும் இன்னும் இப்படிப்பட்ட சில ஏற்பாடுகளை அவர்களுக்குள் பிரமாணமாகச் செய்து கொண்டு நடத்த ஆரம்பித்தார்கள். வள்ளலார் உத்தரவின்படி மூடி வைத்திருந்த சபையைத் திறந்ததே பெருங்குற்றம். அந்த சபை எப்படிப் போனாலும் நமக்கென்ன?அதன்பேரில் மூடி வைக்கச்சொன்ன வள்ளலாருக்கு இல்லாத பொறுப்பு நமக்கு இல்லை.அல்லது திறந்த வர்கலாவது வள்ளலார் திருக் கரத்தால் எழுதிக் கொடுத்த மேற்படி பத்திரிக்கையின் படியாவது நடத்த வேண்டும்.அதையும் விட்டார்கள்,
மேற்படி பத்திரிக்கையில் "இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரையில் திருவாயிற்படிப்புறத்தில் தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் . பித்தளை முதலியவற்றால் செய்த குத்து விளக்குகளும் மேல் ஏற்றுகின்ற குளோப்புகளும் வேண்டாம் என்றார்கள். திரு வாயிற்படிப்புறத்தில் தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்பதற்கு விரோதமாக மூலஸ் தானத்தில் ஒரு நிலைக் கண்ணாடியை மாட்டி அதற்குள் ஒரு அகண்டத்தி வைத்து பித்தளை முதலியவற்றால் செய்த குத்து விளக்காலும் மேல் ஏற்றுகின்ற குளோப்புகளாலும்அலங்காரம் செய்து திரையைத் தூக்கி இதுவரையிலும் யாரும் பாராத அற்புதமான தீபத்தைக் காட்ட ஆரம்பித்தார். வள்ளலார் சொல்லுக்கு ஓம் இது விரோதமே. தமது ஆன்மப்பிரகாசமாகிய ஞான சபையைப்போல் வெளிமுகமாக விளக்கிக் காட்டி ஆண்டவர் வருகைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ஒரு சிறிய குடிசையாவது போடுங்கள் என்று சொன்னார்கள். அங்கிருந்த பொருள் கொண்டோர் வள்ளலாரின் குறிப்பின்படி ஒரு அலங்காரமான கட்டிடத்தைக் கட்டினார்கள் .இந்தக் கட்டிடத்தை வள்ளலார் கண்ணால் பார்த்ததே இல்லை.