பூஜை முறை என்னவெனில்:
காலையில் ஸ்நானம் செய்து 8 மணிக்கு சபைக்கு போகும்போது எனக்கென்று ப்ரத்ஏகமாய்க் கொடுத்திருக்கும் பீரோவில் வைத்திருக்கும் பட்டு அரைஞாண் கயிறு ,பட்டு கௌபீனம் ,பட்டு வாய்க்கட்டு, கால்களுக்குச் சுற்றிக்கொள்ளும் பட்டு (இவைகள் எல்லாம் வெள்ளை பட்டு) இவைகளைத் தரித் துக்கொண்டு உள்ளே போய் தென்னங்குருத்து ஈர்க்கினால் அமைத்த திரு அலகினால் ரத்ன ஜமக்காளம் விரித்து இருக்கும் ஏழு பிராகாரங்களையும் சுத்தி செய்துவிட்டு ,ஏழு திரைகளுக்கு வெளியில் வந்து கற்பூர ஆராத்தி செய்து எல்லோருக்கும் விபூதி கொடுப்பது வழக்கம் .இதே வழக்கம் தான் தைப்பூச தினமும். ஆனால் அன்றைய தினம் பகல் இரண்டு மணிக்கு நடைபெறும். மற்றைய தினம் சாயந்திரம் ஐந்து மணிக்கு, எக்காலத்தும் திரையைத் திறந்து உள்ளே இருக்கும் தீப தரிசனம் செய்விப்பது கிடையாது. ஜனங்கள் சேவிப்பது தரைக்கு வெளியில் இருக்கும் கற்பூர தரிசனம் தான்,தீபாராதனை காலத்து எல்லோரும் அருட்பா பாராயணம் கும்பலாக செய்வார்கள்.(ஆதாரம்:ரத்னம் அவர்கள் ஸ்டேட் மெண்ட் இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் உள்ளது)