தவம் செய்தால் என்னென்ன அனுபவங்கள் ஏற்படும்?
நமது நெற்றியில் ஒரு கதவும் பூட்டும் உள்ளதாக அருட்பாவில் சொல்லப்பட்டுள்ளது.ஓர் ஆச்சாரியனைக் கொண்டு அதைத் திறந்து கொள்ளவேண்டும் என்று வள்ளலார் வழி காட்டியுள்ளார்.வள்ளலாரே வந்துதான் திறக்க வேண்டும் என்ற உறுதி மிக்கோர் அவ்வாறே பெறட்டும்.மற்றவர்களில் தவம் செய்தால்தான் உடல் மாற்றம் பெற முடியும் என்று உணர்ந்தோர் நம்மில் ஓரளவிற்குச் சிறந்தவராக நமக்குத் தெரிந்த ஒருவரிடம் நம்முடைய நெற்றிக்கண்ணைத் திறந்து கொள்ளப் பெற வேண்டும்.மனம் செயல் பட்டால் இறை அனுப வம் ஏற்படாது என்று வள்ளலார் திட்ட வட்டமாக அறிவிக்கிறார். சான்று அகவல்.
உரை மனம் கடந்த ஒரு பெரு வெளிமேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி. ஜபம்,தியானம் இரண்டிலும் மனம் இயங்கும்.இவை இரண்டும் சன்மார்கத் திற்கு ஒத்ததல்ல.மனம் செயல்படாது நிற்கும் நிலையே தவம் எனப்படும்.வள்ளலார் தவம் செய்தே எல்லா அனுபவங்களையும் பெற்றார் என்பதற்கு ஆயிரக் கணக்கான பாடல்கள் அருட்பாவில் சான்றாய் நிற்கின்றன.
தவம் செய்ய ஆரம்பித்தால் முதலில் புருவ மத்தியில் ஓர் உணர்வு ஏற்படும்..இதுவே வானத்தின்மீது மயில் ஆடக்கண்டது.
காரண ஒழுக்கத்தில் மனதை எந்தவித ஆபாசத்திலும் செலுத்தாமல் முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் .இதுவே தவத்தின் ஆரம்பம்.
அங்கே கவனத்தைச் செலுத்தினால் ஒரு சிறிய ஓசை கேட்க ஆரம்பிக்கும்.இதுதான் மயில் குயில் ஆச்சுதடி என்ற வரியின் அனுபவம்.
அந்த சத்தத்தை உற்றுக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.நாளடைவில் முரசு, சங்கு, வீணை போன்ற பலவித நாதங்கள் கேட்கும்,நம் உடம்பிலே மலர் மனம் வீசுமாம். இதற்கு பரநாத நிலை என்று பெயர். இந்த நிலையில் அண்ட பகிரண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி தோன்றும். இதுவே சிற்சபை அனுபவம், இதனைத் தொடர்ந்து அமுதம் உண்ணக் கிடைக்கும். தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.
இதை அடுத்து அப் பேரொளி நடுவே பொன்னொளி தோன்றும், இது பொன்னம்பல அனுபவம்.சுத்த தேகம் பிரணவ தேகமாக மாறும்.
இறுதியாக அப் பொன்னொளி நடுவே உள்ளொளியின் அசைவு காட்சியாகும்.அதுதான் இறைவன், அதுதான் நடராசன். அந்த உள் ஒளிதான் இந்த உடம்பிலே கலந்து பிரணவ தேகத்தை ஞான தேகமாக மாற்றும்.இதுவே வள்ளலார் பெற்ற அனுபவம். உள் ஒளி கலந்ததைத்தான் ஆண்டவன் ஒன்னோடு கலந்தான் என்று வள்ளலார் பாடியுள்ளார்..பேரொளி அதன் நடுவே பொன்னொளி ,பொன்னொளி நடுவே உள் ஒளி.ஜோதியுட் ஜோதியுட் ஜோதி இதுதான்.அனுபவ மாலைப் பாடல்களும் குறிப்பாக 54 வது பாடல் அனுபவமும் இதுவே. i l
Write a comment