சன்மார்கக் கொடியின் வெள்ளை மஞ்சள் நிற அளவு பற்றி ஓர் ஆய்வு:
வடலூர் தருமச் சாலையில் உள்ள கொடியும் ஞான சபையில் உள்ள கொடியும் வெள்ளை பாதி மஞ்சள் பாதி என்ற அளவில் உள்ளது.
மேட்டுக் குப்பத்தில் சித்தி வளாகத் திரு மாளிகையில் ஏற்றப்பட்டுள்ள கொடியில் மஞ்சள் மூன்றில் ஒரு பங்கும் வெள்ளை இரண்டு பங்குமாக உள்ளது.
திருச்சி, மதுரை முதலிய இடங்களில் ஏற்றப்படும் சன்மார்கக் கொடியில் மஞ்சள் கால் பங்கும் வெள்ளை முக்கால் பங்குமாக உள்ளது.எல்லாம் வள்ளலாரின் சன்மார்க்க சங்கங்கள் தானே.ஏன் இந்த மாறுபாடு?
இதை ஆய்வு செய்து ஒரு முடிவைக் காணும் அவாவில் நன்னிலம் திரு சுந்தரராஜன் அவர்கள் சென்னையில் ஒரு கூட்டம் கூட்டினார். அக்கூட்டத்தில் தவத் திரு ஊரன் அடிகளார்,திரு பழ சண்முகனார்,துறவி கந்தசாமி அவர்கள், ஈரோடு கதிர்வேல் அவர்கள், முபா அவர்கள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.நீதி அரசர் திரு பழனிசாமி அவர்கள் வாத பிரதி வாதங்களைக் கேட்டு 47 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார். அதில் சன்மார்கக் கொடியில் கால் பங்கு மஞ்சளும் முக்கால் பங்கு வெள்ளையும் இருப்பதே சரி என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் அந்தத் தீர்ப்பை மதிக்கவில்லை,தவத்திரு ஊரன் அடிகளார் சாலையில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தபோது கொடியின் நிற அளவு பாதி பாதியாக மாற்றப்பட்டது.பாதி மஞ்சள் பாதி வெள்ளை கொண்ட கோடி கிருத்துவர்கள் கோடியாகும்.அவர்கள் ஊர்வலத்தில் ஏந்திச் செல்லும் கொடியைப் பார்த்தால் இந்த உண்மை தெரியும்நமது புருவ மத்தியில் உள்ள ஆன்மாவின் நிறம் கால் பங்கு பொன்மையும் முக்கால் பங்கு வெண்மையும் கலந்த நிறம் என்று வள்ளலாரே ஓர் அளவு சொல்லி உள்ளார்.தயவு திரு சரவணானந்தா அவர்கள் கருத்தும் இதுவேயாகும். எனவே நாம் அனைவரும் கொடியில் மஞ்சள் கால் வெள்ளை முக்கால் என்றே வைத்துக் கொள்வது மிக மிக சிறந்ததாகும்.
Write a comment