மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்று வள்ளலார் பாடிஉள்ளார்.
வான் என்ன செய்துகொண்டது? வள்ளலார் என்ன செய்துகொண்டார்?
இதற்கு விடை காண மகாதேவ மாலைப் பாடலைப் பார்க்க வேண்டும்.பாடல் எண்கள் 19 & 20
மானாகி மோகினியாய் விந்துவாகி மற்ற வையால் காணாத வானமாகி
நானாகி நானல்லனாகி நானே நானாகும் பதமாகி நான்தான் கண்ட
தானாகி தானல்லனாகி தானே தானாகும் பதமாகிச் சாகச ஞான
வானாகி வான் நடுவில் வயங்குகின்ற மௌன நிலையாகி எங்கும் வளரும் தேவே.
இந்தப் பாடலில் வானமானது மற்றவையால் காணாதது என்று சுட்டிக்காட்டுகிறார்.வானம் எப்படி மற்றவையால் காணமுடியாதவாறு உள்ளதோ அவ்வாறே நானும் என்னைக் காணமுடியாதவாறு செய்துகொண்டேன் என்கிறார்.ஞான தேகம் தோன்றியும் இருக்கும் அல்லது தோன்றாமலும் இருக்கும். தான் மற்றவர் கண்களுக்கு தோன்றாமல் இருக்கும் நிலையையே வான் செய்துகொண்டதை நான் செய்துகொண்டேன் என்றார்.
அடுத்த பாடல்
மந்திரமாய்ப் பதமாகி வன்னமாகி வளர் கலையாய்த் தத்துவமாய்ப் புவனமாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவியாகித் தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவை ஒன்றும் அல்லவாகித் தானாகித் தனதாகித் தான் நான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப்பாலாய் அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
இந்தப் பாடலில் அந்தரம் என்றது ஆகாயம்தான்.அது தான் என்றும் நான் என்றும் காட்டாது என்றார். அதுபோல்தான் வள்ளலாரும் தன்னைக் காட்டவில்லை. ஆனால் ஞான தேகத்துடன் இன்றும் இருக்கிறார். அவரைக் காணவேண்டும் என்று உண்மையான விரதம் இருந்தால் மனமிரங்கி அவர் தன்னைக் காட்டக்கூடும்.. அல்லது சாதனா சகாயத்தால் கண்ணொளி விஷேசிக்கப் பட்டால் நம் கண்ணாலேயே அந்தக் காரண தேகத்தை காணமுடியும். இது சம்பேடு ஸ்ரீதர நாயக்கருடன் வாதம் செய்தபோது வள்ளலார் கூறியது.
Write a comment