SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
VALLALAARAI VANAGUVOM

வள்ளலாரை வணங்கலாமா? இறைவனுடைய ஞான தேகத்தை வள்ளலாரும் பெற்றார்..இறைவன் தன கையில் இருந்த செங்கோலை வள்ளலாரிடம் கொடுத்து நீயே செங்கோல் செலுத்து என்றான்.இறைவனின் பொருள் அனைத்தும் வள்ளலாரின் பொருள் ஆயின.இறைவனின் வடிவும் வள்ளலாரின் வடிவுஆயிற்று .இறைநின் சித்துக்கள் அனைத்தும் வள்ளலாரின் சித்துக்கள் ஆயின/ உன் உருவம் என் உருவம் உன் வார்த்தை என் வார்த்தை என்றும் இறைவன் கூறினான். சான்று அகவல்.
தங்கோல் அளவது தந்து அருட்ஜோதி செங்கோல் செலுத்தென செப்பிய தந்தையே
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே
தன் சித்து அனைத்தையும் தன் அரசாட்சியில் என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித்தந்தையே
இறைவன் வள்ளலார் இருக்கும் இடம் தேடி வந்து அவருடன் கலந்துவிட்டான். ஆதாரம் வள்ளலாரின் பாடல்
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னாள் புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலர் அணைமேல் பளிக்கு அறையினூடே திருவடி சேர்த்தருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திருவருள் அமுதம் நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழந்தனையே.
இறைவன் வள்ளலாரின் உடம்பிலே கலந்து விட்டதால் அவர் உடம்பிலே கற்பூர மனம் வீசியதாம். சான்று
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு மேனியிலே கலந்த மணம் அதுதான்
இற்பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்து உளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர் புண்ணியனார் திரு வடிவில் நன்னியவாறதுவே
நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே.
இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டதால் வள்ளலார் இறைவன் ஆனார்.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் நீ அடைந்து விலக்குக மகிழ்க என்று தனக்கு ஆணை இட்டதாக வள்ளலார் அகவலில் கடைசியிலே வெளிப் படுத்தியுள்ளார். இன்னொரு பாடலில் எல்லார்க்கும் துணையாய் இருக்க வைத்தாய் என்றும் பாடியுள்ளார். இன்னும் நிறைய சொல்லமுடியும் . முடிவான கருத்து என்னவென்றால் நாம் வள்ளல்ளார் யார் என்று சரியாகப் புரிந்துகொண்டு அவரை வணங்கி குறைகள் அனைத்தும் நீங்கப் பெற்று இன்பமாக வாழ்வாம்