உலக மக்களைத் திருத்தி ,அவர்களை சன்மார்க்க சங்கத்தில் சேர்த்து ,அவர்கள் இந்தப் பிறவியிலேயே , இறைவனை அடையுமாறு செய்யவுமே திரு அருட்பிரகாச வள்ளலார் இந்த உலகத்திற்கு வந்தார். எந்த ஆசிரியரிடத்தும் கல்வி பயிலாது , எல்லாக் கலைகளையும் நன்கு அறிந்தவராக விளங்கினார்.. தொல்காப்பியம் பாணிநீயம் போன்ற இலக்கண நூல்களையும் மனப் பாடமாக சொல்லக்கூடிய நாவலத்தை சிறு வயதிலேயே பெற்றிருந்தார்.
ஜாதி , மதம், சமயம் ,முதலியவைகள் பொய் என்று ஆதியிலேயே அறிந்தவர் அவர்.இந்த உடம்பிலே உயிர் எப்படி ஒன்றுதான் இருக்கமுடியுமோ அப்படி இந்த உலகிலும் இறைவன் ஒருவன்தான் இருக்கமுடியும் என்றார் . நம் நாட்டிலே முதலில் இந்து மதம் iமட்டுமே இருந்தது.புத்தர் தோன்றியபின் அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் புத்த மதத்தினர் ஆயினர். பின்னர் சமணம், இஸ்லாம், கிருத்துவம் போன்ற அனேக மதங்கள் வந்தன. மக்கள் அவற்றையும் ஏற்றனர்.மதங்கள் நம் நாட்டில் பரவின./தெய்வங்களும் பலப்பல ஆயின. வள்ளலார் இந்தப் பிரிவுகள் அனைத்தினையும் கண்டார். இறைவனஒருவன்தான் அவன்தான் அருட்பெருஞ்சோதி என்று வள்ளலாரும் ஆரம்பத்திலேயே கூறியிருந்தால் சன்மார்கமும் இன்னொரு மதமாகப் பரவி இருக்கும்.வள்ளலாரும் ஒரு மதத் தலைவராகி இருப்பார். சமய மதங்களை ஒழித்து மக்களை ஒன்றாக்க வந்தவர் இன்னுமொரு பிளவை ஏற்படுத்துவாரா
நீங்கள் நல் ஒழுக்கத்திற்கு வருவதோடு மற்றவர்களையும் எவ்விதத் தந்திரத்தாலாவது நம்மவர்களாக்கிக் கொள்ளவேண்டியது என்று நமக்கு அறிவுரை கூறிய வள்ளலார் தான் அதை செய்யாமல் இருப்பாரா? முதலில் சமயம் சார்ந்த பாடல்கள் பாடி தன்னையும் ஒரு பக்தனாகக் காட்டிக்கொண்டார்.மக்களும் அவரது பாடல்களில் மயங்கி அவரை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தக்க சமயத்தில் தன் உண்மையான கருத்தை வெளியிட்டார். இதுவே உண்மை. அவர் என்றுமே சமயம் சார்ந்தவரும் அல்ல. சமயப் பற்று கொண்டவரும் அல்ல. நாம் அவரை நன்கு உணர்ந்து கொள்ளும் அளவிற்கு புத்தி சாலிகள் அல்ல என்பதும் அவர் அறிவார். அதனால்தான் தன்னைப் பற்றிய உண்மையை அவரே பாடி உள்ளார்.
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்றென்றே எண்ணியதல்லால் சச்சிதானத் திறையும் வேறேன்னியதுண்டோ
அண்ணல் நின் பாதம் அறிய நானறியேன் அஞர் இனி சிறிதும் இன்காற்றேன் திண்ணமே நின் மேல் ஆணை இன்றன்னைத் தெளிவித்துக் காப்பதுன் கடனே.என்று பாடியுள்ளார். அவர் கருவிலேயே திரு உடையவர்.பாலுண்ணும் குழவியாய் இருந்தபோதே சிற்றின்பத்தில் அருவருப்பு கொண்டவர்..விளையாடும் சிறு பருவத்திலேயே பாலர் வியக்க இறைவனைப் புகழ்ந்து புகழ்ந்து பாடியவர். நான் உரைக்கும் வார்திஎல்லாம் நாயகன் தன் வார்த்தை என்ற பிறகு அவர் பாடலில் எதையும் நாம் புறக்கணிப்பது நமது அற்ப அறிவையே வெளிப்படுத்தும் .
Write a comment