இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு - 3
posted 28 months ago
30 Sep 2009 13:59:40 GMT 1:59:40 PM
1035 views
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பசித்திரு தனித்திரு விழித்திரு
கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம் கிழேகொடுக்கபடுள்ள பாடல் ஒரு சன்மார்க்க அன்பரால் எழுதப்பட்டவை இவர் இந்த வையகத்தில் உள்ள மாந்தர்களை எல்லாம் வடலூருக்கு வாருங்கள் என்று கூவி அழைக்கிறார் அங்கெ நமது வள்ளல் பெருமான் நமக்கெல்லாம் பேரருள் புரிய காத்துக்கொண்டு இருக்கிறார் நாம் இந்த பூமியில் ஜனனம் எடுத்த பலனை அடைந்து வாழ்வோமாக.
அருட்பெரும்ஜோதி தெரியுதையா
ஆனந்த வாழ்வு புரியுதையா
வள்ளலின் ஆலயம் தெரியுதையா நம்மை
வாருங்கள் என்று அழைக்குதையா (அருட்)
வடலூர் எல்லையில் நடக்கையிலே நம்
வறுமைகள் எல்லாம் மறையுதையா
ஐயன் கருணையை என்னிபோகயிலே நம்
ஐயங்கள் எல்லாம் விலகுதையா (அருட்)
பக்தர்கள் கூட்டதை காண்கையிலே நம்
பக்தியும் எல்லையை தாண்டுதையா
சின்னமையின் மைந்தனை காண்கையிலே
சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா (அருட்)
பசித்தோர் உள்ளத்தை பார்கையிலே
பாங்குடன் உதவிட தோன்றுதையா
அருட்பெரும்ஜோதியை அடைவதிலே
அறியாமை எல்லாம் அகலுதையா (அருட்)
எல்லா உயிரும் தன்னுயிராய்
எண்ணுபவர் உள்ளம் திருக்கோயில்
இறைவன் அவரென நாடி நின்றேன் உன்
திருவடிதுணையென ஓடிவந்தேன் (அருட்)
அன்பர்களே அன்பர்களே இங்கே வாருங்கள்
அருட்ஜோதி அருளையும் பெற்று செல்லுங்கள்
துன்பமெனும் கடலைத்தாண்ட இங்கே வாருங்கள்
துரிய பதம் கடந்தவரை இதோ பாருங்கள் (அன்ப)
ஆடு கோழி வெட்டுவதை அகற்றிவிடுங்கள்
அறியாமை என்னும் பேயைவெட்டி எறியுங்கள்
ஜாதி மத சமயமதை தள்ளிவையுங்கள்
சமரசமாய் வாழ்ந்திடவே இங்கே வாருங்கள் (அன்பர்)
இப்பாடலை இயற்றியவர் (மு.அண்ணாமலை,தேவதானம் பேட்டை)
அன்பர்களே மேலே உள்ள பாடலில் ஒவ்வொரு வரிகளும் அன்பர் அவர்கள் வள்ளல் பெருமான் மீது கொண்டுள்ள பக்தியும் வடலூர் பெருவெளியின் தர்மத்தையும் பெருமான் நமக்கெல்லாம் அருளிய ஜீவகாருண்யத்தையும் எவ்வளவு அருமையாக தந்துள்ளார் எனவே தயவாலர்களே நாமும் ஜீவகாருண்ய சிந்தனையோடும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொண்டவர்களாகவும் நமது பெருமான் நமக்கெல்லாம் காட்டி சென்ற அருள் நெறியில் வாழ்ந்து பேரருள் பெற்று உய்வோமாக.
பசி என்று வருபவர்க்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்,
சென்னை- 6000 43
cell No.9940656549,9677160065