அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி
பசித்திரு தனித்திரு விழித்திரு
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு
தாயும் தந்தையும் குருவும்யான் போற்றும்
சாமியும் நீயன்றோ இறைவா சாமியும் நீயன்றோ
அழகனே ஞான அமுதனே எந்தன் அப்பனே அம்பலத்தே
ஆடும் திருநட நாயகன் நீயன்றோ இறைவா நீயன்றோ
ஞானமும் அதனால் நான் அடைந்த அனுபவமும் உணர்ந்திட
நல்லருள் செய்வாயே இறைவா நல்லருள் செய்வாயே இறைவா
மாயவுலகில் யான்போய் மயங்கிவிழும் காலையில் என் மயக்கம் நீங்கிட நல்லருள் செய்வாயே இறைவா-நல்லருள் செய்வாயே இறைவா
ஒளிவடிவாய் நின்ற ஓங்கார உட்பொருளே உனையான் அறிய
நல்லருள் செய்வாயே இறைவா - நல்லருள் செய்வாயே இறைவா
உயிர் கொலையும் புலைபுசிப்பும் கொண்ட மானிடர் தம்மை நல்வழி நடத்திட நல்லருள் செய்வாயே இறைவா-நல்லருள் செய்வாயே இறைவா
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நாம் இப்படியும் பாடி இறைவனிடம் நல்லதொரு மார்கங்களை பெற்று உய்வோமாக மேலும் இதுபோல் பல செய்திகளை படித்தும் கேட்டும் சன்மார்க்க சிந்தனையோடு பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் எல்லா உயிர்களையும் நம் உயிர் போல எண்ணி ஒன்றுபட்டு வாழ்வோமாக
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
பல்லாவரம்
சென்னை-43
cell no.9940656549