வள்ளலார் ஜோதி
posted 23 months ago
16 Jun 2010 19:17:33 GMT 7:17:33 PM
712 views
ஜோதியுள், ஜோதியுள்,
ஜோதியைக் கண்டவர்;
ஜோதியில் கலந்தவர்,
ஜோதியாய் ஆனவர்
எங்கள் பெருமான்
வடலூர் வள்ளலார்!
'பிரம்மனை அறிந்தவர்
பிரம்மனாய் ஆவர்' என்ற
உப நிடதக் கூற்றுக்கு
உண்மையே வள்ளலார்!
மருதூரில் பிறந்திருந்தும்
‘சிதம்பரம் ராமலிங்கம்’
என்றழைக்க மகிழ்ந்தார்
திருஅருட் பிரகாச
அடிகளார்; வள்ளலார்!
புகைப் படத்துள் அகப்படாத
உருவ ஒளி வள்ளலார்;
நெய்வேலி குயவன்
செய்த அவர் உருவ
பொம்மை கண்டு ‘தன்
பொன் மேனி இப்போ
மண் மேனி ஆனதே’
என்றுருகிச் சொன்னார்.
ஜாதி மத பேதங்கள்
தவிர்த்திடவே போதித்தார்;
சமரச சுத்த சன்மார்க்கம்
சங்கமதைச் சாதித்தார்;
'பசித்திரு' என்றவர்
பி¡¢தோர் ஜீவன்
பசியால் வாடிடும்
கொடுமை பொறுத்திரார்!
தர்ம சாலை கட்டி வைத்தார்
அங்கே என்றும் சமைக்க
அணையா அடுப்பை
ஏற்றி வைத்தார்!
'வாடியப் பயிரை
கண்ட போதெல்லாம்
வாடினேன்' என்றவர்
நாடியது ஒன்றே!
நானில மக்களும்
நலமுடன் வாழ்ந்திட
ஜீவகாருண்ய
ஒழுக்கம் விளக்கினார்!
“புலால் மறுப்பீர்
கொல்லாமை என்னும்
அறம் வளர்ப்பீர்,
மற்றோர் ஜீவன்
உயிர் போக்கும்
பொல்லாப்பு, பாவம் தவிர்ப்பீர்!”
என்றதுடன் நில்லாமல்
தன் பார்வையினால்
மாமிசம் உண்பவரும்
சைவம் சிறந்ததென
தாவர உணவுக்கு
மாற வைத்தார்
கருணை மிகு வள்ளலார்!
மருதூரும், வடலூரும்,
மேட்டுக் குப்பமும்,
சித்தி வளாகமும்,
கருங்குழியும், என்றும்
சிதம்பரம் ராமலிங்கர்
புகழ் பாடும்;
இங்கெல்லாம் வந்தவர்கள்,
அவர் ஏற்றி வைத்த
தீப ஒளி கண்டவர்கள்
வாழ்வில் ஒளி கூடும்!
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’
பெருமை மிகும் வாழ்வை
அனைவருமே பெற்றிடுவீ ர்!
அடிகளாரின் பகழ் பாடி
மனம் மகிழ வாழ்ந்திடுவீ ர்!
வள்ளலார் என்றால்
வகுப்பு வாதம் தவிர்த்தல்;
வள்ளலார் என்றால்
கொல்லாமை, புலால் மறுத்தல்;
வள்ளலார் என்றால்
ஜீவகாருண்யம் ஒழுக்கம்;
வள்ளலார் என்றால்
சமரச சுத்த சன்மார்க்கம்!
வள்ளலாரே நமக்கு
மகா மந்திரம்!
அருட் பெருஞ் ஜோதி!
தனிப் பெருங் கருணை!!
அருட் பெருஞ் ஜோதி!
தனிப் பெருங் கருணை!!