பிரதிமாதம் முதல்வாரம் ஞாயிறன்று சென்னை – 19, திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் ஸ்ரீ திருஅருட் பிரகாச வள்ளலார் அருட்பணி சத்சங்கம் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை மாதாந்திர சொற்பொழிவையும், பசியாற்றுவித்தலையும் செய்து வருகிறது. தொடர்புக்கு: எஸ். வேதாச்சலம், 9941954265.
***
பிரதிமாதம் முதல்வாரம் ஞாயிறன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை சன்மார்க்க சாதுக்கள் மையத்தின் மாத வழிபாடு, தியானம், தெய்வ பாவனை பயிற்சி – வட திருமுல்லைவாயில், சென்னை – 62, ஸ்ரீ திருவருட் பிரகாச வள்ளலார் சபையில் (சிவன் கோயில் குளம் அருகில்) நடைபெறுகிறது. தொடர்புக்கு: வ.வ.கி. சத்தியமூர்த்தி, 9382872726.
***
பிரதிமாதம் இரண்டாம் ஞாயிறன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மணிமங்களம், தாம்பரம் அருகில் – ஸ்ரீ திருவருட் பிரகாச வள்ளலார் சேவா ஆசிரமம். சன்மார்க்கப் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. சங்கத்தின் 75ஆம் ஆண்டு விழா 8.10.2008 முதல் 12.10.2008 வரை நடைபெற உள்ளது.
***
பிரதிமாதம் மூன்றாம் ஞாயிறன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை, அயன்புரம் சன்மார்க்க சங்கம், 15, போலீஸ் மாணிக்கம் பிள்ளை தெரு, அயன்புரம், சென்னை – 23. மாத அகவல் வழிபாடு, சொற்பொழிவு நிகழ்வுகளை நடத்தி பசியாற்றுவித்தல் செய்து வருகிறது. தொடர்புக்கு: எம். தருமலிங்கம், 044 – 2644402.
***
ஆவடி – சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்ந்த நடமாடும் திருவருட்பா வகுப்பு, 144, மெயின் ரோடு, காமராஜ் நகர், ஆவடி, சென்னை – 71. வாரத்தில் நான்கு நாட்கள் சுமார் 200 பேர் வீதம் ஏழை எளியவர்க்கு பகல் உணவு அளித்து வருகிறது. மேலும், நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, ஏழை குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் போன்றவை கொடுத்தல் மற்றும் குடும்பப் பிரச்சனைகளை சுமுக முறையில் தீர்த்து வைப்பது போன்ற சமுதாய சேவைகளை செய்து வருகிறது. தொடர்புக்கு: M. பழனியாண்டி, 044 – 26550271