<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

வள்ளலார் அருளிய உணவுக்குறிப்புகள்


posted 26 months ago
01 Dec 2009 02:35:12 GMT 2:35:12 AM

972 views

 


வள்ளலார் அருளிய உணவுக்குறிப்புகள்


 தயவு - திருச்சிற்றம்பலம்

 

 வள்ளலார் உரைநடை - உபதேச பகுதி - நித்திய கரும விதி - சாதாரண விதியில் இருந்து தொகுக்கப்பட்டவைகள்:

 

 

கொள்ளப்பட வேண்டியவைகள்:


  • காலையில் களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டு பின் வரும் ஜலம் மட்டும்

  • காலையில் பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி, தூதுளையிலை, முசுமுசுக்கையிலை மற்றும் சீரகம் இவைகளின் சூரணம், நல்ல ஜலம், பசுவின் பால் மற்றும் நாட்டு சர்க்கரை இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது

  • காலையில் பசி அதிகரித்து இருப்பின் பேயன், ரஸ்தாளி, பங்காள வாழைப்பழ வகைகளோடு சர்க்கரை சேர்த்து

  • முதற்பக்ஷம் சீராகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளையும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள்

  • கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு மாத்திரம்

  • பழ வகைகளில் பேயன், ரஸ்தாளி வாழைப்பழம் சிறிதளவு மாத்திரம்

  • மிளகு, சீரம் அதிகமாக

  • தாளிப்பில் பசு வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 

  • கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கக்காய், பீர்க்கங்காய், கலியாண பூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் இவைகளின் பதார்த்த வகைகள்.

  • இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் இவைகளை அடுத்தடுத்து கறி செய்து கொள்ளுதல் கூடும்

  • புளியாரைத் துவையல்  தினந்தோறும்

  • கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகள் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும்,  புளியிட்டும், தனித்தும் செய்த கறிகள்

  • புளித்த தயிர்

  • முளை கட்டாத அல்லது முளை கட்டின துவரம் பருப்பு, மிளகு சேர்த்து கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல். இதனோடு குறைந்த அளவு நெய் மாத்திரம்

  •  சுண்ணம் தடவி மேலழுக்கு நீக்கிய சுன்னத்தின் சூரணம் கலந்த ஐந்தில் மூன்று பங்கு சூண்ட காய்ச்சிய  நல்ல ஜலம்

  • வெந்நீர்

  • பகற் போஜனத்தின் பதினேழரை நாழிகைக்குப் பிறகு  சர்க்கரை சேர்த்த பேயன், ரஸ்தாளி, பங்காள வாழைப்பழம்

  • பகலில் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம் பஞ்சவாசங்களோடு போட்டு பின் ஊறிய ஜலம்

  • இரவில் சூடான பதார்த்தங்கள் மாத்திரம், அவை சிறு கத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியன

  • சுமார் 12 நாழிகைக்கு மேல் நன்றாக காய்ச்சிய பால் அல்லது  காலையில் பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி, தூதுளையிலை, முசுமுசுக்கையிலை மற்றும் சீரகம் இவைகளின் சூரணம், நல்ல ஜலம், இவைகள் கலந்த நன்கு காய்ச்சிய பால்

  • சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவும் குறைய அதிக வெற்றிலை அதிகப்பட கலந்து பஞ்சவாசத்தோடு போட்டு கொண்டு முன் வரும் ஜலம் மாற்றும் திப்பி அல்லாது இடையில் வரும்  ஜலம்  மாத்திரம்


சிறிதளவே கொள்ளப்பட வேண்டியவைகள்:


  • உப்பு

  • புளி

  • மிளகாய் 

  • வெங்காயம்

  • வெள்ளை பூண்டு  


தவிர்க்கப்பட வேண்டியவைகள்:


  • குளிர்ந்த ஜலம்

  • கருணை கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள்

  • பேயன், ரஸ்தாளி வாழைப்பழம்  தவிர மற்ற பழ வகைகள்

  • பழைய கறிகள் 

  • கடுகு

  • வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள்

  • சர்க்கரை பொங்கல், ததியோதனம், புளி சாதம் முதலிய சித்திரானங்கள்

  • கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை தவிர்த்த மற்ற கீரைகள்

  • துவரம் பருப்பு அல்லாத மற்ற பருப்பு வகைகள்

  • புலால்

  • இரவில் தயிர், கீரை, வாயுவான பதார்த்தம், குளிர்ச்சியான பதார்த்தம்



Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
வள்ளலார் சுவாமிகள் கொடுத்த அறிவுரைகளை எளிய முறையில் தெரிவித்தமைக்கு நன்றி.
K. Nandakumar

01 Dec 2009 07:59:29 GMT 7:59:29 AM
26 months ago
#2
கருணைமிகு செல்வா,
வள்ளலார் சொன்ன உணவு முறையை முறையாக தொகுத்து கூறியது அருமை.தொடரட்டும் உங்களின் சன்மார்க்க செய்திகள்.வள்ளலார் வாழ்த்துகள்.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதிசுஜாதா.
P Sujatha Rajashree

02 Dec 2009 02:53:39 GMT 2:53:39 AM
26 months ago
#3
most scientific
somasundaram mathivanan

12 Feb 2010 19:16:31 GMT 7:16:31 PM
23 months ago

Login
Login to post your comments
சங்க நிர்வாகி
☎: 044-27971033
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
சின்னம்மையார் இல்லம்,
பழவேற்காடு சாலை, சின்னக்காவணம், பொன்னேரி வட்டம்
Chinnakkavanam , தமிழ் நாடு , India-601204
Home
Documents
Audios
Photo Albums

All the contents including articles, documents, audio and video on this Ramalinga Swamigal Mother Chinnammaiyar House website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace