ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
சாக்ஷி நானே யிருக்கின்றேன்

1 . சைவம்
2.  வைணவம் முதலிய சமயங்களிலும்,

1. வேதாந்தம்
2. சித்தாந்தம் முதலிய மதங்களிலும்,

  "லக்ஷியம் வைக்க வேண்டாம்". அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

ஏனெனில்?

அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,

இவைகளுக்கெல்லாம் "சாக்ஷி நானே யிருக்கின்றேன்

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.
                                                                                                                            --  பேருபதேசம்..
4 Comments
KUMARESAN KRISHNAMURTHY
உண்மை! அதற்காக பிறர் மார்க்கங்களையும் மதங்களையும் அவர் புண்படுத்தவில்லை, புண்படுத்தும் வகையிலும் அவர் இந்த வாசகங்களை உபதேசிக்கவில்லை,

எனவே சன்மார்க்க அன்பர்கள் அகத்தில் இதனை உணர்ந்து, மௌனமாக, உள் ஜோதியாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாடுவதற்கான மிக அற்புதமான வாசகம் இது. எனவே இதனை இடம், பொருள், காலம், பக்குவம் அறிந்து இதை உபயோகப்படுத்த வேண்டும்.
Tuesday, May 14, 2013 at 06:00 am by KUMARESAN KRISHNAMURTHY
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
உண்மை உண்மை!
குமரேசன் அய்யா உங்களின் வார்த்தை சன்மார்க்க வார்த்தை!
Tuesday, May 14, 2013 at 07:30 am by ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
Durai Sathanan
Thank you for this crystal clear clarification.
All possible, Exalt Him Only!
Arut Prum Jyothi,
Durai
Tuesday, May 14, 2013 at 21:20 pm by Durai Sathanan
Senthil Maruthaiappan
ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
Wednesday, May 15, 2013 at 01:33 am by Senthil Maruthaiappan