ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
பாவம் மற்றும் புண்ணியம் பற்றி வள்ளலார் அருளிய விளக்கம்

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன?:

v மனம்

v வாக்கு

v காயம்

என்னும் மூன்றினாலும் அடையும்.

மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும்,

வாக்கினிடத்தில் நால்வகையும்,

சரீரத்தினிடத்தில் நால்வகையும்,

ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:-

மனத்தினால் :

û பரதாரகமனம் பண்ண நினைத்தல்,

û அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்,

û அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல்,

û முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் ,

இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.

வாக்கினால் :

û பொய்சொல்லல்,

û கோட்சொல்லல்,

û புறங்கூறல்,

û வீணுக்கழுதல் –

இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.

தேகத்தினால் :

û பிறர் மனைவியைத் தழுவுதல்,

û புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல்,

û அன்னியர்களை இம்சை செய்தல்,

û தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல்

இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.

பாவங்களாலடையுங் கதி யென்ன?

ê மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும்.

ê வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும்.

ê தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.

இவை போன்றவைகளைத் தவிர்த்து :

இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.

ü அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல்,

ü பொறாமை யடையாதிருத்தல்,

ü அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல்,

ü தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் .

இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்.

ü பொய் சொல்லாமை,

ü கோட்சொல்லாமை,

ü இன்சொல்லாடல்,

ü தோத்திரம் செய்தல் –

அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.

Vriddhachalam_Invi_1.jpg

Vriddhachalam_Invi_1.jpg