Vallalar Groups
வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னே...,வள்ளலார்

{ContentRefr:4796}




வள்ளலார் , தனது சத்திய பெரு விண்ணப்பத்தில் , தான் எப்போது "உண்மை கடவுளை" உணர்ந்ததாக,தெளிவாக , தனது கைப்பட எழுதி உள்ளார்...

"வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னே , எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு , அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள்" ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்து அருளினீர்"
எனவே , வள்ளலாருக்கு "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுளை" , வாலிப பருவம் முதற் கொண்டே தெரியும்.
Muthukumaaraswamy Balasubramanian
வாலிபப் பருவம் தொடங்குதற்கு முன்பே இறைவன் ஒருவன்தான் என்கிற உண்மை வள்ளலார் அறிவார் என்பது உண்மை.வாலிபப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது. உரை நடையில் வள்ளலார் கூறியுள்ளது.ஐந்து வயது வரையில் சைசவம் என்றும் ஐந்து முதல் பதினைந்து வயது வரையில் வாலிபம் என்றும் அருட்பா படித்தோர் அறிவர்.இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில் ஐந்து வயதிற்கு முன்பே இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையை வள்ளலார் அறிந்திருந்தார் அப்படி இருக்க ஒரு சிலர் ஆரம்பத்தில் வள்ளலார் சைவ சமயம் சார்ந்திருந்தார் என்கிறார்களே தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள விண்ணப்பத்தைப் படித்திருக்க ஏன் தவறிவிட்டார்கள்?தயவு செய்து வள்ளலாரையும் குறை கூறித் தங்கள் மேலான அறிவை வெளிப் படுத்தாதீர்கள். நன்றி.
Friday, May 27, 2011 at 02:22 am by Muthukumaaraswamy Balasubramanian