Vallalar Groups
“மாமிச உணவை உண்பது கொலையா” என நீங்கள் கேட்கலாம்?



“மாமிச உணவை உண்பது கொலையா” என நீங்கள் கேட்கலாம்?
கொலையே!! எவ்வாறெனில் , அனைத்து விலங்குகளுக்கும் மனம் முதலான அந்தகரணங்கள்
நன்றாக விருத்தி அடைந்து உள்ளன, எனவே , அந்த உயிர்களை இம்சை செய்யும் போது
( அதாவது கொலை செய்யும் போது ) அந்த உயிரின் துன்பங்கள் அதனுடைய உடைய ஆன்மாவை
சென்று அடைகின்றது . எனவே மாமிச உணவை (அசைவ உணவை) உண்பது கொலையே.
ஆதலால் , மாமிச உணவு(அசைவ உணவு) மனிதனுக்கு உரிய உணவல்ல.
3 Comments
rajaveer jothimurugan
புன்புலா லுடம்பி னசுத்தமு மிதனிற்
புகுந்துநா னிருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே யெண்ணிநா னெண்ணி
ஏங்கிய வேக்க நீ யறிவாய்
வன்புலா லுண்ணு மனிதரைக் கண்டு
மயங்கியுள் நடுங்கியாற் றாமல்
என்பலாங் கருக இளைத்த னனந்த
இளைப்பையு மையநீ அறிவாய்
(பிள்ளைப்பெருவிண்ணப்பம்)
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலிற் போகவிட்டீர்
கொலைத்தொழிலிற் கொடியீர்நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமைநோக்கிக்
கலைத்தொழிலிற் பெரியருளங் கலங்கினரை கலக்கமெலாங் கடவுணீக்கித்
தலைத்தொழில் செய் சன்மார்க்கங் தலையெடுக்கப் புரிகுவதித் தருணந்தானே
(இரங்கல்)
புலைகொலை தவிர்த்த நெறியிலே யென்னைப்
புணர்த்திய புனிதனை யெல்லா
நிலைகளுங் காட்டி அருட்பெருநிலையில்
நிறுத்திய நிமலனை யெனக்கு
மலைவறத் தெளிந்த வமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத்தவனைத்
தலைவனை யீன்ற தாயையென் னுரிமைத்
தந்தையைக் கண்டுகொண்டேனே
ஒரு ஜீவனைக் கொன்று மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுவித்தல் என்பது கடவுளருளுக்குச் இம்மியளவும் சம்மதமுமல்ல, ஜீவகாருண்ய ஒழுக்கமும் அல்ல வென்று சத்தியமாக அறியவேண்டும்.
வள்ளலார்
Thursday, February 11, 2010 at 08:42 am by rajaveer jothimurugan
Raghavendran R
பருகும் நீரிலும் உயிர்னங்கள் வாழ்கின்றன,அதனை பருகுவதால் கொல்லாமை ஆகாத..?
Wednesday, April 25, 2012 at 19:24 pm by Raghavendran R
KUMARESAN KRISHNAMURTHY
தண்ணீரில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு ஆன்மா இருப்பதில்லை, எனவே தண்ணீரைச் சுட வைப்பதால் தவறில்லை.
இதுமட்டுமல்ல நாம் சுவாசிக்கும் காற்றில் கூட சில நுண்ணியிர்கள் இருக்கத்தான் செய்கின்றன. வலது நாசியினால் சுவாசித்தால் அவைகள் கொல்லப்படுவதில்லையாம், அதனால் தான் ஞானிகள் பெரும்பாலும் வலது நாசியினால் சுவாசிக்கிறார்கள்.
Thursday, April 26, 2012 at 03:03 am by KUMARESAN KRISHNAMURTHY