Vallalar Groups

FOCUS ON VALLALAR

PresentationAtVizupuramConference.pdf

Download


Category:  Presentation Slides made for Vizlupuram Conference
Summary:  A power point presentation made to explain visitors at the conference about VallalarSpace.com and its initiatives. Daeiou Team, Thiruvannamalai Group and VallalarGroups prepared this presentation.
File Size:  3 mb
Author: 
Released On:
Hits:  43
Description: 

{DownloadRefr:640}

Comments:

Title:
 
Comment:
 
(* login required)

Latest Prev</span 1 Next Begining 
1. # re: PresentationAtVizupuramConference.pdf
Jul 29 2008 10:03AM Ramanujam

அருமையானதொரு விளக்கமான சுருக்கத் தொகுப்பு என்றே இதனைக் கூறலாம்.

இந்த Demonstration விழுப்புரத்தில், மாவட்ட சமரச சன்மார்க்க எழுச்சி மாநாட்டில்

அனைத்து அன்பர்களின் கவனத்திற்காகவும் லேப்டாப் வசதியுடன் செய்முறைப்

பயிற்சியாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

செய்முறைப் பயிற்சியைக் கண்டு அனனவரும் மிக்க மகிழ்ச்சி எய்தினர். குறிப்பாகச்

சொல்ல வேண்டுமானால், சேலம் குப்புசாமி அய்யாவும், மற்றும் சேலம் டாக்டர்

என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் அவர்களும் வந்து பார்த்து

பாராட்டிச் சென்றனர்.

இந்த செய்முறைப் பயிற்சி, வள்ளலார் ஸ்பேஸ் டீம் மெம்பர், பெங்களூர் அன்பர்

(1) திரு கார்த்திகேயன் மற்றும் சென்னையில் உள்ள ஸ்பேஸ் டீம் மெம்பர், (2) திரு சதீஷ்

குமார் அவர்களால் - எழுச்சி மாநாட்டிற்கு வந்திருந்த அன்பர்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

செலவில்லாமல் ஸ்பேஸ் டைரக்டரியில் இடம் கிடைப்பதற்கு என இப்படி ஒரு

வழியா உள்ளது என,.கணிப் பொறி இயக்கத் தெரிந்தவர்கள் வியந்து சென்றனர்.

தவிரவும், இந்த இணைய தளத்தைப்பற்றிய செய்தி, ஆங்கிலத்திலும், தமிழிலும் விழுப்புரம்

மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் Flex Banner

மூலமும், கூட்ட அரங்கின் வாசற் பகுதியிலேயே தொங்க விடப்பட்டிருந்தது.

அது, அனைவரையும் கவர்ந்தது.

வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம், உலகம் முழுவதிலும் நடைபெறும் சன்மார்க்கச்

செய்திகளைத் தாங்கி, "எப்போதும் உங்களுடன் - உள்ளேன்" என்ற விதத்தில் செயல்பட்டு

வருகிறது.

இந்த இணைய தளம், அமெரிக்காவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பன் மற்றும்

சிங்கப்பூரில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் ஆகியோரின் மூலம் துவக்கப்பட்ட நோக்கமே,

வள்ளல் பெருமான் (இணைய தளத்தின் மூலம்) ஒவ்வொருவரின் வீட்டிலுமே சென்று அருள் பாலித்து,

அவர்களது செயல்பாடுகளுக்கு உறு துணையாக இருக்க வேண்டும். அவர்களை சுத்த சன்மார்க்க வழியில்

இட்டுச் செல்ல வேண்டும் என்ற அரிய நோக்கத்தின்பாற் பட்டது ஆகும்.

பெருமான் ஒவ்வொருவரிலும், ஒவ்வொரு வகையால் காரியப்படுகிறார்.

அந்த வகையில், ராமநாதபுரம் ஜோதிமுருகன் அய்யா மற்றும் சிங்கப்பூர் சிவகுமார் மற்றும் அமெரிக்கா

செந்தில் மருதையப்பன் ஆகியோர் இணைந்து முதன் முதலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக

வள்ளலார் ஆர்க் என்ற இணைய தளமாக மலர்ந்தது.

வள்ளல் பெருமான், தனது அருள் அனக ஆட்சியை, வெட்ட வெளி மூலம் பரப்பி, வலம் வந்தார்.

திரு அருட்பாவினை, செலவின்றி, வீட்டிலேயே டெளன்லோடு செய்து கொள்ளும் விதத்தில் எல்லா

வசதிகளையும், அந்த இணைய தளம் அமைத்துக் கொடுத்தது.

அதன் பின், வள்ளல் பெருமானின் அருளால், வள்ளலார் ஸ்பேஸ் டீம் மெம்பர் உணர்த்தப்பட்டதால்,

வள்ளலார்ஸ்பேஸ் என்ற இணைய தளம், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, ஒரு நாடு என்ற நிலை கடந்து,

இந்த உலகம் முழுவதும் உள்ள ஜீவர்கள் பயன்பெற வேண்டும் என்று உயரிய நோக்கில், 2008 ஏப்ரல் முதல்

வாரத்தில் அமெரிக்காவில் இருந்து, தனது, டெஸ்ட் ரிலேயைத் துவக்கியது,.ஸ்பேஸ் டீமின் மெம்பர்களாக -

சென்னையிலும் மதுரையிலும் - பெங்களூரிலும் உள்ளவர்களது ஒத்துழைப்புடன், தனது சோதனை

வெளியீட்டினைத் துவக்கியது.

துவங்கி 3 மாதங்களே முடிவடைந்த நிலையில், இந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்ட பாங்கினைக்

கண்டு பல நாடுகளிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், வியந்தனர். முதல் 2 மாதங்கள், இந்த இணைய தளம்,

சன்மார்க்க அன்பர்களின் வாழ்த்து மழையால் நனைந்தது..

அந்த வாழ்த்துச் செய்திகள் அனைத்திற்கும் உரியவர், அருட் பிரகாசரே ஆவார். ஏனெனில் பெருமான்

அவர்கள் பேருபதேசத்தில் தெரிவித்தது போல, தற்போது நடப்பது,ஞான சித்தர்களின் காலம். சுத்த

சன்மார்க்கக் காலம்.

தற்போது, கிட்டத்தட்ட இந்த இணைய தளத்தினை, பல்வேறு நாடுகளிலுமிருந்து,

27,000 சன்மார்க்கிகள் கண்டு களித்துள்ளனர்

சன்மார்க்கத்தை பெருமானே, நேரடியாக நடத்துகின்றார்.

அதனை செயல்படுத்துவதற்கென உரிய பக்குவ ஜீவர்களையும், அவரே தேர்வு

செய்கிறார். சுத்த சன்மார்க்கத்தில் - எல்லாம் பொது நோக்கத்தில் செயல்

படுத்தப் பட வேண்டும் என அறிவுரை பகர்ந்ததும் - பெருமானார் ஆவார்

என்பதை அறியாதார்தான் உள்ளனரா ?

அந்த வகையால், வள்ளற் பெருமானாரிடமே - நேரடியாக - தாம், பணிபுரியும்

நிறைவினை, இந்த இணைய தளத்தில் பணியாற்றுவதன் மூலம், வள்ளலார்ஸ்பேஸ் டீம்

மெம்பர்கள், பெற்று வருவதும் உண்மை.

திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமனார் அவர்களது சன்மார்க்கச் சொற்பொழிவு, ஆடியோ சி.டி.யாக

பெங்களூர் அன்பர் கார்த்திகேயன் மூலம், ஒரு வாரத்திற்கு முன்பாக, இவ் விணைய தளத்தில்

வெளியிடப்பட்டவுடன்.அந்த ஆடியோ சி.டி, தனக்கு உடனடியாக வேண்டும் என,

நாகர்கோவிலைச் சேர்ந்த சன்மார்க்கி செல்வி சுஜாதா ஜெயஷ்ரீ, தொலைபேசி மூலம்

கேட்டுப் பெறும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று சாது அய்யா அவர்களே

இந்தக் கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின்போது இரவு 9.45 மணியளவில் நினைவு

கூர்ந்தார்கள்.

ஆனால், தமது சொற்பொழிவு ஆடியோ சி.டி,குறித்த செய்த இணைய தளத்தில் இடம்

பெற்றது, தமக்கே தெரியாது. அதனைப் பார்த்துவிட்டுக் கேட்கும் அன்பர்களின் மூலம் மட்டுமே

தமது கவனத்திற்கு வரப்பெற்றது என சாது அய்யா அவர்கள் கூட்ட அரங்கினில் தெரிவித்தார்கள்.

இந்த இணைய தளம், வள்ளற் பெருமானின் அருள் ஆணையால் துவக்கப்பட்டதால்,

நாடு, மொழி, மதம், இனம் என்ற வேறுபாடு பாராமல், லாப நோக்கமின்றி, பெருமானார் விரும்பியபடி,

ஆன்ம நேய உரிமைப்பாடு (Universal Brotherhood).கண்டடைவதற்காகவென்றே செயல்பட்டு வருகிறது.

இதன் பெரும் பயனை - இந்த இணைய தளத்தினைக் கண்ணுறும் அன்பர்கள் - உணர்ந்து,

இந்த மானிட தேகம் கிடைக்கப் பெற்றதன் பயனைத் துய்ப்பார்களேயானால், அதுவே இந்த

இணைய தளத்தினை வள்ளற் பெருமானார் அவர்கள் துவக்கியதன் பயன்பாட்டினை அடையச் செய்யும்

என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..





Latest Prev</span 1 Next Begining