அன்பர்களே ,
உண்மையை விரும்புவர்கள் , தேடுபவர்களுக்கு சன்மார்க்கம் ,எல்லாம் வல்ல இறைவனால் காட்டி கொடுக்கப்படும்.
பொய்யை(போலி/பகட்டு/பந்தா) விரும்பும் மனிதர்கள் , பொய்யைத்தான் நாடி செல்வார்கள். அவர்கள் என்று சத்தியத்தை
உண்மையை கடைபிடிக்க தயார் ஆகிறார்களோ , அந்த கணமே , இறைவன் கருணை செய்வார்.
|
கேள்வி:.சன்மார்க்கம் என்று கூருகிறீர்களே, ஏன் உங்கள் சன்மார்க்கத்தில் குறைவான மக்களே உள்ளார்கள்?
|
|
சன்மார்கத்தில் "உண்மை" ஒன்று மட்டுமே உள்ளது.( ஆனால், பாமர மக்கள் பொய்யை கலந்து கொடுத்தால் தான், அதனை எடுத்து கொள்வார்கள் ).
|
|
சன்மார்கத்தில் "ஒழுக்கங்கள்" உள்ளது. ( மற்ற மார்கங்களில் , அது "ரிலாக்ஸ்" , செய்யபடுவதால், மற்ற மார்கங்களை பாமர மக்கள் விரும்புகின்றார்கள் ).
|
|
சன்மார்கத்தில் "உயிர் இரக்கமே" உயிர் நாடி.( மற்ற மார்கங்களில் இதனை மேலோட்டமாக கூருகின்றார்கள்.எனவே, அங்கு , கூட்டம் அலை ,அலையாக மோதுகின்றது).
|
|
சன்மார்க்த்தில் , "கொல்லாமை" அறம் வலிறுத்தபடுகின்றது. .( மற்ற மார்கங்களில் , இதனை மேலோட்டமாக கூருகின்றார்கள்)
|
|
முடிவாக , அனைத்து மார்க்கங்களின் உள்ள நல்ல , தூய உண்மையை விரும்பும்
ஆன்மாக்கள் சன்மார்க்கத்தை நோக்கி ஈர்க்கக்கப்படுகின்றன
|
உண்மையை விரும்புவர்கள் சிலராகவும் , பொய்யை விரும்பவர்கள் பலராகவும் இருப்பதால் , சன்மார்க்கத்தில் சிலராகவும் ,
மற்ற மார்கத்தில் பலராகவும் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்
"பொய்யர்க்கு பொய்யன். பொருந்தி உளம் தேறும் மெய்யர்க்கு மெய்யன்"
anbudan,
karthikeyan
Write a comment