உலகில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமரசத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டுவது வள்ளலார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு அருட்பிரகாச இராமலிங்க அடிகளாரின் கொள்கைகளே. இக் கொள்கைகள் உலகில் பரவினால் மதங்கள் ஒன்றுபடும். மதவாதம் ஒழியும். சாதிகள் மறையும், சமத்துவம் தழைக்கும், மனித நேயம் பெருகும், பயங்கர வாதம் அழியும், பசி அகலும். தர்மம் தழைக்கும், வீட்டுக்கொரு தர்ம சாலையும், வீதிக்கு ஒரு ஞான சபையும் தோன்றும். ஆன்ம நேயம் பரவி உலகம் அமைதியுறும். இந்த அடிப்படையில் உருவானதே வள்ளலார் பன்னாட்டு சமரச சன்மார்க்க சங்கம்.
