தூத்துக்குடியில் திரு கலியுகவரதன் வீட்டுத் திருமண விழாவில் வள்ளலார் வாழ்க்கை வரலாறு வழங்கிய விபரம்.
தூத்துக்குடி நகரில், மில்லர்புரம் நீச்சல்குளம் அருகே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை, வள்ளலார் நந்தவனம் என்ற இடத்தை உருவாக்கி, சங்கக் கட்டிடம் கட்டி, தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். அச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் திரு கலியுக வரதன் உள்ளார்.
அவரது மகன் திரு ஜோதி நெல்லை குமார் மற்றும் ரா.சுந்தர லெக்ஷ்மி என்ற ரம்பா ஆகியோரின் திருமணம், தூத்துக்குடி நகரில் உள்ள அபிராமி மஹால் என்ற திருமண மண்டபத்தில் 11.9.2008 அன்று வியாழக்கிழமை முற்பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளற் பெருமானிடம் மிகுந்த பற்றுக் கொண்டு சன்மார்க்க சங்கத்தை தூத்துக்குடி நகரில், திரு கலியுக வரதன் தன்னுடன் சேர்ந்த அன்பர்களின் உதவியுடன், பொது மக்களின் பேராதரவுடன் திறம்பட நடத்தி வருகிறார்.
http://www.vallalarfiles.com/image/bAxHz,$,2bECI9hGxQ91fKAsOg,$,3d,$,3d/sz-tn650/Tu32.jpg16560000.jpg
சமீபத்தில்தான் பாபநாசத்திற்கு அருகே உள்ள விக்கிரம சிங்க புரம் என்ற இடத்தில் 1.8.2008 முதல் 3.8.2008 வரையில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்களையும் வரவழைத்து, சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு அருந்தொண்டாற்றினார்.
அவருடன் திரு கணேசன் மற்றும் அவரது சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள், 3 நாள் விழாவினை அங்கு, சிறப்புற நடத்தி முடித்தனர். மலேசியாவிலிருந்து வந்திருந்த சுவாமி தர்மலிங்கம் என்பவரை எல்லாம் அழைத்து, அந்த விழாவில் சுத்த சன்மார்க்கம் குறித்துப் பேசச் செய்தார்.
அவர், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் “தயவு” பெரு நெறியின் பாலும் மிகுந்த பற்றுக் கொண்டவர்.
http://www.vallalarfiles.com/image/,$,2ficketMzkzQx,$,2bZxsvxdCjw,$,3d,$,3d/sz-tn650/tu1.jpg16500000.jpg
மதுரையில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு “தயவு” விஜயராமன் என்பவரை அழைத்து, பிரதி மாதந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வள்ளலார் நந்தவனத்தில் திரு அருட்பா விளக்கக் கூட்டங்கள், சத் சங்கங்கள் நடத்தி வருகிறார்.
இதன் மூலம், தூத்துக்குடி ஏரியாவில் சன்மார்க்கம் பரவுவதற்கு அவர் தூண்டுகோலாக உள்ளார்.
அவரது தனது மகனுக்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அன்பர்களை வரவழைத்தார்.
திருமணத்திற்கு முதல் நாளான 10.9.2008 புதன்கிழமை அன்று, வள்ளற் பெருமானின் திரு அருட்பா பாடல்களையும், சன்மார்க்க நெறி பற்றிய திரு சத்திய சீலன் அவர்களின் சொற்பொழிவினையும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த அன்பர்கள் மற்றும் உற்றார், உறவினர் ஆகியோர் கேட்கும் வண்ணம் ஒலிக்கச் செய்தார்.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றிய தயவுப் பாக்களில் 10 பாடல்கள் சமீபத்தில் இசைவடிவம் பெற்று ஆடியோ சி.டி.யாக வெளி வந்துள்ளன.
வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளத்திலும், அப் பாடல்களில் 6 பாடல்களைத் தற்போது “ஆடியோ சி.டி” என்ற தலைப்பின்கீழ், இதன் பொறுப்பாளர்கள் (VallalarSpace Team Members) ஒலிக்கச் செய்துள்ளனர்.
தனது மகனின் திருமண விழாவிலும் 10.9.2008 அன்றே இத் தயவுப் பாடல்களை ஒலிக்கச் செய்தார்.
சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய திரு அருட்பா பாடல்கள், சொற்பொழிவு, தயவுப் பாடல்கள் முதலானவற்றைக் கேட்ட அன்பர்கள், மற்றும் அவரது உற்றார் உறவினர், நண்பர்கள், தூத்துக்குடி வாழ் மக்கள் இதனை மிகவும் விரும்பிக் கேட்டனர்.
http://www.vallalarfiles.com/image/GH4kCo,$,2fJCiMeww7OJ9R,$,2bzQ,$,3d,$,3d/sz-tn650/tu2.jpg16520000.jpg
மறுநாள் (11.9.2008) அன்று காலை 6.45 மணிக்கே அருட்பெருஞ்ஜோதியினை ஏற்றி, விழாவிற்கு வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் மூலம், திரு அருட்பா பாடல்களைப் பாடச் செய்தார். காலை 7.00 மணியிலிருந்து 9.15 மணி வரை திருமணத்திற்கு வந்திருந்த பல்வேறு மாவட்ட அன்பர்கள் மூலம் அருட்பெருஞ்ஜோதி அகவலினைப் பாராயணம் செய்யச் செய்தார்.
திருமண மண்டபத்தில், சன்மார்க்கம் “எனை அடுத்தார்” என்று துவங்கும் திரு அருட்பா பாடலினை ப்ளெக்ஸ் பேனரில் தொங்கச் செய்தார்.
திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர்கள் ஆகியோரை வரவேற்று, முதலில். “ வள்ளலார் வரலாறு” என்ற சிறு நூலினை அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் திருமண மண்டபத்திற்குள் வந்தவுடன் திருமண வைபவத்தினை ஒரு கண்ணாலும், மறு கண்ணால், ஆன்மீகச் சிறப்புப் பெற்ற, இச் சிறு நூலையும், படிக்க ஆரம்பித்தனர்.
கவிஞர் கோவி.ஆறுமுகம் என்ற அன்பர் எழுதிய இந்தச் சிறு நூல், வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை, (19 படங்களுடன்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள், வள்ளல் பெருமான் வசித்த இடங்கள், அவர் வகுத்துச் சென்ற சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் முதலானவற்றை விளக்கும் 36 பக்கங்களுடன் (Pocket size) அச்சிட்டு வெளி வந்துள்ளது. அதன் பிரதிகளை, வந்திருந்த அனனவருக்கும் வினியோகம் செய்தார்.
http://www.vallalarfiles.com/image/aDtvv31YHjR8fMwlwdXCNQ,$,3d,$,3d/sz-tn650/Tu31.jpg16540000.jpg
ஆக, மேலே விவரிக்கப்பட்ட வகையில், தனது மகனின் திருமணத்தை நடத்தி, அதன்மூலம், தூத்துக்குடி, மற்றும், பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கும் “சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு” அவர் உறுதுணையாக இருந்தார் என்பதுவே இதில் மிகச் சிறப்பான அம்சமாகும்.
தனது மகனின் திருமணத்தையே, சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு ஒரு நிலைக் களமாகப் பயன்படுத்திய, திரு கலியுக வரதனின் செயலினை வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வியந்தனர்.
தூத்துக்குடி ஆழ் கடலில் உதித்த இந்த நல்முத்து, பல சன்மார்க்க முத்துக்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பரிபூரண அருளும், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்தா அவர்களின் தயவுப் பெருநெறியின் அருள் விழைவும், அவருக்குக் கிட்டும்படி, அவரையும், புத்தம்புதுத் தம்பதிகளையும், அவருடன், இப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள சன்மார்க்க அன்பர்கள் அனனவரையும், வாழ்த்திச் சென்றனர்.
2 Comments
Andaman Kothandam