Tuticorin Sanmarga Sangam
தூத்துக்குடி சன்மார்க்க சங்கம்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வள்ளலார் நந்தவனம், மில்லர்புரம், நீச்சல்குளம் அருகில், தூத்துக்குடி 628 008.
தூத்துக்குடி நகரில், 22.10.1978ம் நாள், மேற்காணும் சன்மார்க்க சங்கம் துவங்கப்பட்டது. இச் சங்கத்தினைத்
துவக்கி வைக்க தவத்திரு ஊரன் அடிகள் வருகை தந்தார்கள்.
முதலில் சொந்தக் கட்டிடம் இல்லாதிருந்த இச் சங்கத்திற்கு,. 1999ஆம் ஆண்டு, முதலில் தர்மச்சாலை
கட்டப்பட்டது,.
இதன் தற்போதைய அலுவலக நிர்வாகிகளாக, கீழ்க்காணும் நபர்கள் உள்ளனர்.
1. திரு மா. பழனி, தலைவர்.
2. திரு கலியுக வரதன். செயலாளர்.
3. திரு பெ. கணபதி, பொருளாளர்.
4. திரு எஸ்.பி.ஆர். ஜெயபால், உதவிச் செயலாளர்.
5. திரு ஆர். கணேசன், நிர்வாகி.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
6. திரு எஸ். பெரியசாமி
7. திரு பி. சிதம்பரம்.
8. திரு அங்குராஜ்.
9. திரு ஜெய்ஹிந்த் பாலகிருஷ்ணன்.
10. திரு பொன்ராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்.
இவர்கள் தவிர, இன்னும் மற்றையோருடனும்,. இந்த சன்மார்க்க சங்கம்,
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், திண்டுக்கல் சுவாமி
சரவணானந்தா அவ்ர்களின் "தயவுப் பெரு நெறி" யினையும், தூத்துக்குடி நகரிலும் மற்றும்
அதற்கருகில் உள்ள ஏனைய ஊர்களிடம், பொதுமக்களிடம் பரப்பி வருகின்றது.
பிரதி வியாழன் தோறும் வழிபாடு நடைபெற்று, கஞ்சி வார்க்கப்படுகிறது.
இச் சங்கம் ஆரம்பக்காலத்தில், தூத்துக்குடி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலில்
இயங்கி வந்ததால், அப் பழைமையைப் பாராட்டும் விதத்தில், ஞாயிறு தோறும் வ்ழிபாடும்
உணவளிக்கும் பணியும் இடைவிடாது நடைபெற்று வருகின்றது.
வள்ளலார் நந்தவனத்தில் உள்ள சங்கக் கட்டிடத்தில்,. பிரதி மாதந்தோறும் முதல்
ஞாயிற்றுக் கிழமையன்று. சத் சங்கம், சன்மார்க்கப் பெரியோர் ஆகியோரைக் கொண்டு
சன்மார்க்க கொள்கை விளக்கங்கள், சன்மார்க்கச் சொற்பொழிவுகள் முதலானவை
நடத்தப்படுகின்றன.
மதுரையிலிருந்து தயவு விஜயராமன் என்ற அன்பர்., இங்கு வந்து
சன்மார்க்கச் சொற்பொழிவு நடத்தும் பணியை பிரதி மாதமும் முதல் ஞாயிறு தோறும்
மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம், அப் பகுதி மக்கள், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை நன்றாக
அறிவதற்கு, இந்த சன்மார்க்க சங்கம் உறுதுணையாக அமைந்துள்ளது.
வடலூரில், 25 வருடங்களாக அற்றார் அழி பசி தீர்க்கும் பணியினை
இந்த சங்கம் கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது.
வடலூரிலும் ஓர் இடம் வாங்கி, தர்மச்சாலை பசித்தோர்க்கு அன்னமளிக்கும்]
பணியைச் சிறப்புடன் செய்து வருகிறது.
தைப் பூச விசேஷ தினங்களில், அன்னம் பாலிக்கும் பணி, இந்தச் சங்கத்தின்
பிரதானமாக பணியாகும்.
தவிரவும் கடந்த 2 ஆண்டுகளாக, சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாமையும்
நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு,.தூத்துக்குடியில், உள்ள வள்ளலார் நந்தவனத்தில், இவ் விழா
சிறப்பாக நடைபெற்ற்து.
இந்த ஆண்டில்,. 1.8.2008 (வெள்ளி) மாலை முதல் 3.8.2008ந் தேதி வரை,
சன்மார்க்க வாழ்வியல் பயிற்சியினை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்
அருகே உள்ள உலகாம்பிகை திருமண மண்டபத்தில், வெகு சிறப்பாக நடத்தியது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள் வந்து, சன்மார்க்கச்
சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
சுமார் 100 (ஆண் பெண்) சன்மார்க்க அங்கத்தினர்கள்
இவ் வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும், இந்த முறை, 2.8.2008ந் தேதியன்று, மலேசியாவிலிருந்து திரு தர்மலிங்க
சுவாமிகள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், வடலூர், விழுப்புரம், மற்றும் ஏனைய இடங்களிலிருந்து
பல சன்மார்க்க அன்பர்களும், சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினர்
இவ் விழாவில், மதுரையிலிருந்து ஞானதீபம் பத்திரிகை நடத்திவரும் சன்மார்க்க அன்பர்
திரு ஜோதி ராமலிங்கம், மற்றும், திரு பால முருகன் என்ற அன்பர்களை அனுப்பி, இந்த
வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு சன்மார்க்க அன்பர்களுக்கு உதவிகளைச் செய்ய
ஏற்பாடு செய்தார்.
கும்பகோணத்திலிருந்து வந்த அன்பர், சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய
புத்தகங்களை விற்பனை செய்தார்.
தவிரவும், ஏற்கனவே திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய பால நூல்கள்,
இச் சங்க செயலாளர் திரு கலியுக வரதனால், விற்ப்னன செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரிதாக உள்ள பல புத்தகங்கள், இங்கு எளிதாக விற்பனைக்குக் கிடைத்தன.
திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் விற்பனைக்குக் கிடைத்தன.
Ramanujam jam
The activities carried out by this Sanmarga Association are very much appreciated.
Tuticorin is a place wherein maximum fishermen are residing and their regular
duty is fishing.
In that particular place, this Sanmarga Sangam, spreads Suddha Sanmarga
principles for the past 30 years.. It is highly appreciable.
Daeiou.
Monday, August 4, 2008 at 10:14 am by Ramanujam jam