Thiruarutpa Deiva Isai Amutham Project

திருவருட்பா இசையமுதம் - Converting entireThiruarutpa Hymns into Audio

Part-8 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற




Category:  2007 - Vallalar Isai Vilzha - வள்ளலார் இசை விழா
Summary: 
Sri Dharmalinga Swamigal Group,
2007 Vallalar Isai Vilazha Conducted at Vadalur

Author: 
Released On:

Album Name:  Sri Kagabhunjandar Music Group
Artist Name:  Sri Senthil Das
Duration:  5 min

Hits:  258

{VideoRefr:451} {VideoPlayRefr:451}

 1. தெய்வமணி மாலை


Song#8  ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே

 


Song#12 பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்

பார்முகம் பார்த்திரங்கும்

பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்

பதியும்நல் நிதியும்உணர்வும்

சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்

தீமைஒரு சற்றும்அணுகாத்

திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்

செப்புகின் றோர்அடைவர்காண்

கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு

þக்‘ழியங் கொடியும்விண்ணோர்

கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்

கொண்டநின் கோலமறவேன்

தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே

 


Sponsored by VallalarOrg Foundation


Mr. SenthilDas - Playback Singer

Mr.Sathish Varshan - Keyboard

Mr. Natraj - Flute

Mr.Kannan - Elec.Rythem Pad

Mr.Venkatesh - Tabala, Tavil.


 


 


Add Comments:

Title:
 
Comment:
 
(* login required)

Latest Prev</span 1 Next Begining 
2. # re: Part-8 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
Aug 2 2008 11:05AM K SRINIVASAN

ORUMAIYUDAN NINAIKKINRA .......... THIS SONG IS SO PLEASING AND PLEASANT PRAYING WITH GOD LORD MURUGA, WHILE WE ASKING SOMETHING WITH SOME ONE OR GOD , WE HAVE TO ASK WITH PLEASING MANNER. NOT AS A EXPRESS SPEED DHADA PUDA DHADA PUDA.
SO THE SINGER Mr, SENTHIL DAS IS NOT SINGING WITH PLEASING MANNER. THE SAINT VALLALAR WOULD NOT FORGIVE HIM. PLEASE CORRECT
KSVASA
1. # re: Part-8 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
Jun 29 2008 9:21AM Mahendiran Rajagopal

செந்தமிழ் தாசனோ .....செந்தில்தாசா !!!
வள்ளல் வரிகளுக்கு....வா:வொளி(லி) அருமை !!!

-இராசகோபால் மகேந்திரன்
சிங்கப்பூர்
Latest Prev</span 1 Next Begining