Thiruarutpa Deiva Isai Amutham Project

திருவருட்பா இசையமுதம் - Converting entireThiruarutpa Hymns into Audio

Part-6 வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே




Category:  2007 - Vallalar Isai Vilzha - வள்ளலார் இசை விழா
Summary: 
Sri Dharmalinga Swamigal Group,
2007 Vallalar Isai Vilazha Conducted at Vadalur

Author: 
Released On:

Album Name:  Sri Kagabhunjandar Music Group
Artist Name:  Sri Senthil Das
Duration:  3 min

Hits:  109

{VideoRefr:449} {VideoPlayRefr:449}

 

51. சண்முகர் வருகை




( 538 ) வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே

வள்ளி மணாளரே வாரும்

புள்ளி மயிலோரே வாரும்


 

( 539 ) சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று

சண்முக நாதரே வாரும்

உண்மை வினோதரே வாரும்


 

( 540 ) பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று

பொன்னான வேலரே வாரும்

மின்னார்முந் நூலரே வாரும்


 

( 541 ) காகம் கரைந்தது காலையும் ஆயிற்று

கண்ணுதல் சேயரே வாரும்

ஒண்ணுதல் நேயரே வாரும்


 

( 542 ) செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்

செங்கல்வ ராயரே வாரும்

எங்குரு நாதரே வாரும்


 

( 543 ) அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்

ஆறுமுகத் தோரே வாரும்

மாறில்அகத் தோரே வாரும்


 

( 544 ) சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்

சூரசங் காரரே வாரும்

வீரசிங் காரரே வாரும்


 

( 545 ) வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்

வேலாயுதத் தோரே வாரும்

காலாயுதத் தோரே வாரும்


 

( 546 ) சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்

தேவர்கள் தேவரே வாரும்

மூவர் முதல்வரே வாரும்


 

( 547 ) பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்

பன்னிரு தோளரே வாரும்

பொன்மலர்த் தாளரே வாரும்


 

( 548 ) மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது

மாமயில் வீரரே வாரும்

தீமையில் தீரரே வாரும்


 

( 549 ) தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்

சுப்பிர மணியரே வாரும்

வைப்பின் அணியரே வாரும்


 


Sponsored by VallalarOrg Foundation


Mr. SenthilDas - Playback Singer

Mr.Sathish Varshan - Keyboard

Mr. Natraj - Flute

Mr.Kannan - Elec.Rythem Pad

Mr.Venkatesh - Tabala, Tavil.


 


Add Comments:

Title:
 
Comment:
 
(* login required)

    No results found.