Thiruarutpa Deiva Isai Amutham Project

திருவருட்பா இசையமுதம் - Converting entireThiruarutpa Hymns into Audio

Part-3 நல்ல மருந்து




Category:  2007 - Vallalar Isai Vilzha - வள்ளலார் இசை விழா
Summary: 
Sri Dharmalinga Swamigal Group,
2007 Vallalar Isai Vilazha Conducted at Vadalur

Author: 
Released On:

Album Name:  Sri Kagabhunjandar Music Group
Artist Name:  Sri Senthil Das
Duration:  5 min

Hits:  126

{VideoRefr:429} {VideoPlayRefr:429}

9. நல்ல மருந்து


நல்ல மருந்திம் மருந்து - சுகம்

நல்கும் வைத்திய நாத மருந்து


 

( 2431 ) அருள்வடி வான மருந்து - நம்முள்

அற்புத மாக அமர்ந்த மருந்து

இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்

கின்புரு வாக இருந்த மருந்து நல்ல


 

( 2432 ) சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்

தானோதா னாகித் தழைக்கும் மருந்து

அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி

தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல


 

( 2433 ) வித்தக மான மருந்து - சதுர்

வேத முடிவில் விளங்கு மருந்து

தத்துவா தீத மருந்து - என்னைத்

தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல


 

( 2434 ) பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்

பேசப் படாத பெரிய மருந்து

இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்

என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல


 

( 2435 ) நானது வாகு மருந்து - பர

ஞான வெளியில் நடிக்கு மருந்து

மோந வடிவா மருந்து - சீவன்

முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல


 

( 2436 ) புத்தமு தாகு மருந்து - பார்த்த

போதே பிணிகளைப் போக்கு மருந்து

பத்த ரருந்து மருந்து - அநு

பானமுந் தானாம் பரம மருந்து நல்ல


 

( 2437 ) மாலயன் தேடு மருந்து - முன்ன

மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து

காலனைச் சாய்த்த மருந்து - தேவர்

காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல 


 


Sponsored by VallalarOrg Foundation


Mr. SenthilDas - Playback Singer

Mr.Sathish Varshan - Keyboard

Mr. Natraj - Flute

Mr.Kannan - Elec.Rythem Pad

Mr.Venkatesh - Tabala, Tavil.


 




 


Add Comments:

Title:
 
Comment:
 
(* login required)

    No results found.