1.10.2011 முதல் 5.10.2011 இலங்கை சாவகச்சேரி வேம்பிராயில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் மற்றும் உலக சகோதரத்துவ நாள் விழா.
=0=0=0=0
வரும் 1.10.2011 (சனி) முதல் 5.10.2011 (புதன்) வரையிலும், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாவகச்சேரிக்கு அடுத்த வேம்பிராய் கிராமத்தில், சன்மார்க்க அன்பர் திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரின் முயற்சியால் கட்டப்பட்டுள்ள சத்திய ஞான கோட்டத்தில், உலக சகோதரத்துவ நாள் விழா மற்றும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் விழா நடைபெற உள்ளது.
இலங்கையைத் தவிர, வெளிநாடுகளில் வசிக்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், இந்த விழாவில் கலந்து கொள்ளும்படியும் அன்புடன் நிர்வாகத்தினரால் அழைக்கப்படுகின்றனர்.
இம்முறை, இந்த இடத்திற்குப் போவதற்கு, Ministry of Defence-லிருந்து No objection Certificate (தடையின்மைச் சான்றிதழ்) தேவைப்படாது என திரு கேத்தீஸ்வரன் மற்றும் சமீபத்தில் இலங்கைக்குச் சென்று வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்குச் செல்வதற்கு, விசாவும் கிடையாது. கடந்த மூன்று மாதங்களாக, தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக, கப்பல் போக்குவரத்தும் நடைபெறுகின்றது. விமானம் மூலம் செல்பவர்களும் செல்லலாம். கப்பல் மூலம் செல்பவர்களும் செல்லலாம். விமானக் கட்டணத்தைக் காட்டிலும், கப்பல் மூலம் இலங்கை செல்வதற்கு கட்டணம் குறைவானது ஆகும்.
எனவே, உலகளாவிய அளவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தில், இலங்கை சாவகச்சேரி வேம்பிராயில் நடைபெறும் உலக சகோதரத்துவ நாள் மற்றும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழாவில் பங்கேற்று அருள் நலம் பெறும்படி, விழாக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
368.JPG
357
374