Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டம்-திரு கேத்தீஸ்வரனுக்கு மலேசிய அன்பர்கள் வழங்கிய பட்டம்.

இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டம்-திரு கேத்தீஸ்வரனுக்கு மலேசிய அன்பர்கள் வழங்கிய பட்டம்.

=0=0=0=0=

சுத்த சன்மார்க்கப் பெருநெறி தழைத்தோங்க வேண்டுமென, இலங்கை சாவகச்சேரியை

அடுத்த வேம்பிராயில் சத்திய ஞான கோட்டம் மற்றும் சத்திய தருமச்சாலையினைக் கட்டி,

திறப்பு விழாவினை கடந்த ஆண்டு நிகழ்த்தியவர் இலங்கை அளவெட்டி கிராமத்தைச் சேர்ந்த

திரு கேத்தீஸ்வரன் ஆவார்.

சத்திய ஞான கோட்டம். வேம்பிராய்.இலங்கை.

சத்திய தருமச்சாலை, வேம்பிராய், இலங்கை.

சத்திய ஞான கோட்டத்தில் 20.1.2011 அன்று தைப்பூச நாள் அருட்பெருஞ்ஜோதிக் காட்சி.


இந்த ஆண்டில், 9.1.2011 முதல் 11.1.2011 வரை மலேசிய நாட்டிற்கு அவர் பயணம் செய்து, சுத்த சன்மார்க்க

விழிப்புணர்வு உரைகளை பல்வேறு இடங்களில் நிகழ்த்தினார். அவர், கடந்த 20.1.2011 அன்று

இலங்கை வேம்பிராயில் முதல் தைப்பூச நாள் விழா கொண்டாடி, மக்களுக்கெல்லாம் அருட்பெருஞ் ஜோதி

தரிசனத்தைக் காண்பித்தார்.


அவ்விழாவிற்கு சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, சைனா, லண்டன்,

ஹாங்காங் போன்ற பல்வேறு நாடுகளிலும் மற்றும் சத்திய ஞான கோட்டத்தின் அருகே வசிக்கும் இலங்கை மக்களும்

வருகை புரிந்து அருட்பெருஞ் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர்.


அருள் நலம் பயக்கும் பல நிகழ்ச்சிகளையும் அங்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு மலேசிய

சன்மார்க்க அன்பர்கள் சமரச சுத்த சன்மார்க்க செம்மல் என்ற பட்டம் அளித்து கெளரவித்தனர்.

058

058

372

372

924

924