Srilanka Gnana Sabai Temple
15.1.2011 முதல் 20.1.2011 வரை இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாக்கள்.

சத்திய ஞான கோட்டம், வேம்பிராய், சாவகச்சேரி, இலங்கை.

உழவர் திரு நாள் மற்றும் தைப்பூச ஜோதி தரிசன நாள் விழாக்கள்.

நடைபெறும் நாட்கள் : 15.1.2011 முதல் 20.1.2011.வரை.

=0=0=0=0=0=


இலங்கை வேம்பிராயில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில் வரவிருக்கும் 15.1.2011ந் தேதி முதல் 20.1.2011 நாள் வரையில் உழவர் திருநாள் மற்றும் தைப்பூச அருட்பெருஞ்ஜோதி தரிசன விழா வைபவங்கள் நடைபெற உள்ளன. எனவே, பல்வேறு நாடுகளில் இருந்தும் சன்மார்க்க அன்பர்கள், வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கு பெற வேண்டுமென்றும், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருள் ஆசி பெற வேண்டும் எனவும் மிக்க கருணையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தியாவிலிருந்து செல்லும் அன்பர்கள் மூலமாக, சுத்த சன்மார்க்க கருத்துக்கள் அடங்கிய நூல்கள், இவ் விழாவின்போது இலங்கை வேம்பிராய்க்கு வருகை தரும் இலங்கை அன்பர்களுக்கும் மற்றும் பல்வேறு நாட்டு அன்பர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோன்று, வேறு யாரும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த புத்தகங்கள் சி.டி.கள் முதலானவற்றை அனுப்பி வைக்க வேண்டுமாயின் அவர்க்ள் மூலம் அனுப்பி வைக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.