Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய் சத்திய ஞானக் கோட்டத்தில் 2011 ஜனவரியில் பொங்கல் விழா மற்றும் தைப்பூச விழா.

இலங்கை வேம்பிராய் சத்திய ஞானக் கோட்டத்தில் 2011 ஜனவரியில் பொங்கல் விழா மற்றும் தைப்பூச நாள் விழா.

=0=0=0=0=0=0

இலங்கை அளவெட்டியைச் சேர்ந்த திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரது கடுமையான முயற்சியின் பயனாக, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சாவகச்சேரியை அடுத்த வேம்பிராயில் சத்திய ஞான கோட்டம் கட்டப்பட்டு, கடந்த 2010 செப்டம்பர் 5ந் தேதி, திறப்பு விழா செய்யப்பட்டது.

வரும் 2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் தைப் பொங்கல் மற்றும் தைப் பூச நாளை அன்பர் திரு கேத்தீஸ்வரனின் குடும்பத்தினர் வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் கொண்டாட உள்ளனர்.

கடந்த முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண இயலாதவர்கள், மேற்காணும் விழாவில் அங்கு கலந்து கொண்டு அருள் நலம் பெறலாம். 15.1.2011 முதல் 20.1.2011 வரையிலும் அந்த விசேடங்கள் நடைபெற உள்ளன. அந்த நாட்களில் திருவாசகம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்விதம் இலங்கை செல்ல விரும்புபவர்கள், தங்களது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் பிரதியினை, திரு கேத்தீஸ்வரனின் இலங்கை விலாசத்திற்கு 2010 நவம்பர் மாத இறுதிக்குள் தவறாமல் அனுப்பி வைத்தால், இலங்கை அரசாங்கத்தில் மினிஸ்ட்ரி ஆஃப் டிபன்ஸில், தடையில்லாச் சான்றிதன் முன்கூட்டியே பெற்று வைக்க இயலும் என அன்பர் திரு கேத்தீஸ்வரன் தெரிவிக்கின்றார்.

457

457

462

462