இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் சாவகச்சேரி தென்மராட்சி
திவ்ய ஜீவன சங்கத்தினரின் வழிபாடு நடைபெறல்.
நாள் - 17.10.2010 (ஞாயிறு)
நேரம் - காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
=0=0=0=0=0=0=0=
இலங்கை சாவகச்சேரியை அடுத்துள்ள வேம்பிராயில், அளவெட்டியைச் சேர்ந்த திரு கேத்தீஸ்வரன் என்ற அன்பர், அவரது மனைவியார் சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி விஜயலக்ஷ்மி, அவரது மைத்துனர் திரு ஈசன் ஆகியோரின் பெருமுயற்சியால், கடந்த 2010 ஆகஸ்ட் மாதம் 23ந் தேதி அன்று சத்திய தருமச்சாலை திறப்பு விழா செய்யப்பட்டது.
அதனை அடுத்து, 5.9.2010 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா செய்யப்பட்டது. தொடர்ந்து 5.9.2010 அன்று 5 முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனமும், 6.9.2010 (திங்கள்) அன்று காலை ஒரு முறையும் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
உலகளாவிய அளவில், பல்வேறு நாடுகளிலுமிருந்து பல அன்பர்கள் இந்த வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த சத்திய ஞான கோட்டம் மற்றும் சத்திய தருமச்சாலை ஆகியவை திரு ஈசன் குடும்பத்தினரால் நித்திய தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சத்திய ஞான கோட்டத்தில் கடந்த 17.10.2010 (ஞாயிற்றுக் கிழமை) அன்று, சாவகச்சேரியை அடுத்த தென்மராட்சியைச் சேர்ந்த திவ்ய ஜீவன சங்கத்தினர் வருகை தந்து திரு அருட்பா பாடல்களைப் பாடியும், வழிபாடும் செய்தனர். அன்றைய தேதியில் கலந்து கொண்டோருக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.
(செய்தி - திரு சுப்ரமணியம், (ஓய்வு பெற்ற) அதிபர், சாவகச்சேரி.
128
306
356
360
305
171
603