இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டம் செல்ல விரும்புவோர் கொண்டு செல்ல வேண்டிய சான்றிதழ்.
=0=0=0=0=0=
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சாவகச்சேரி மற்றும் வேம்பிராய். தற்போது திரு கேத்தீஸ்வரன் அவர்களால் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்ட சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் செல்ல வேண்டுமானால், வவுனியாவுக்கு அடுத்த படியாக உள்ள ஓமந்தை என்ற இடத்தில் மிலிட்டரி செக் போஸ்ட் உள்ளது. அதற்கு வடக்குப் புறம் சுமார் 5 மணி நேர பயணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளது.
வவுனியா ஏரியாவைத் தாண்டி அந்த ஓமந்தை மிலிட்டரி செக் போஸ்ட் சென்றதும். மினிஸ்டரி ஆஃப் டிபன்ஸிலிருந்து அதற்கு வடக்கே உள்ள பகுதிக்குச் செல்வதற்குரிய தடை இல்லாச் சான்று கொண்டு செல்ல வேண்டும். (No objectin Certificate issued by the Ministry of Defence, Sri Lanka) அது வாங்காதவர்கள், வவுனியாவைத் தாண்டி செல்ல இயலாது. எனவே, இலங்கையில் வேம்பிராய்க்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், முதலில், கொழும்புவில் இறங்கியவுடன், மினிஸ்ட்ரி ஆஃப் டிபன்ஸ் ஆபீஸ் சென்று, அங்கு, தாம் யாழ்ப்பாணம் செல்ல உள்ளதையும், அவசியத்தையும் வலியுறுத்தி, பாஸ்போர்ட், ஏர் டிக்கட் முதலானவற்றின் ஜெராக்ஸ் நகலுடன் சமர்ப்பித்தால் அவர்கள், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவர். இதுதான் அங்கு வழக்கத்தில் உள்ளது. இவ்விதம் மினிஸ்ட்ரி ஆஃப் டிபன்ஸில் தடையில்லாச் சான்று பெறாதவர்கள், ஓமந்தை செக் போஸ்டில் அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இந்த விபரம் எல்லா அன்பர்களின் தகவலுக்காகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.