Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா இலங்கைப் பயணம் கட்டுரை.

இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழாவிற்குச் சென்று வந்த பயணக் கட்டுரை.

=0=0=0=0=

இலங்கையின் வடமேற்கு மூலையில் உள்ளது ஜாஃப்னா ஏரியா. அதில் அடங்கியது யாழ்ப்பாணம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளதுதான் சாவகச் சேரி நகராட்சி. அதற்கு 5 கி.மீ தூரத்தில் உள்ளது வேம்பிராய் என்ற ஒரு கிராமம் ஆகும்.

சுத்த சன்மார்க்க நெறியில் ஈடுபாடு கொண்ட அன்பர் திரு கேத்தீஸ்வரன் பிறந்த ஊரின் பெயர் அளவெட்டி என்பதாகும். அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி பிறந்த ஊர் சாவகச்சேரி. திரு கேத்தீஸ்வரன், ஸ்விட்சர்லாந்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அவர் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க விளக்கங்கள், திரு அருட்பாக்கள், உரை நடையில் சொல்லப்பட்ட கருத்துக்களை மிகவும் ஆழமாக வேரூன்றிப் பயின்றார்.திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வெளியிட்ட சுத்த சன்மார்க்க நூல்களின் பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சைவ சித்தாந்த நெறியில் ஊறியிருந்த திரு கேத்தீஸ்வரன், சுத்த சன்மார்க்கம் பயிலுவதற்கு வள்ளற் பெருமானின் அருட் பாடல்களும், திண்டுக்கல் சுவாமி அவர்களின் நூல்களும் பெருமளவில் துணை புரிந்தன.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் நாட்டில் வள்ளற் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞானக் கோட்டம் ஆகியவை போன்றே இலங்கையிலும் கட்டுவதற்கு தாம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் பாரிஸில் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளிலிருமிருந்து கலந்து கொண்ட அன்பர்களின் மத்தியில் அவர் தமது நோக்கத்தைத் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டில் அவர், திண்டுக்கல் சுவாமி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தமது விருப்பத்தையும் அங்கு அவர் தெரிவித்தார்.

அவரது நோக்கத்திற்கு தோழமை உணர்வோடு உதவி புரிந்தவர், இராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டின் நிறுவனர் திரு ஜோதிமுருகன் ஐயா ஆவார்.

திண்டுக்கல் சுவாமி அவர்களின் ஆசீர்வாதத்துடன், அவர், வேம்பிராயில் ஏற்கனவே கிரயம் பெற்றிருந்த நிலத்தில் சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் பணியினை ராமநாதபுரம் ஜோதி முருகன் ஐயாவின் உறுதுணையுடன் 2005ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டித் துவக்கினார்.


.....தொடரும்.....