Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய் சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டத் திறப்பு விழாவிற்குச் செல்லும் அடியார்கள் திருக்கூட்டம்.

இலங்கை வேம்பிராய் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான கோட்டத் திறப்பு விழாவிற்குச் செல்லும் அடியார் திருக்கூட்டம்.

இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதக் கடைசி வாரம் மற்றும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான சீரிய முயற்சிகளை திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி அவரது மகன் தயானந்தன் மற்றும் இலங்கையில் வாழும் சன்மார்க்கக் குழுவினர் முனைப்புடன் செய்து வருகின்றனர்.

இலங்கையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியில், சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் ஆகியவை துவக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு ஆறுமுக நாவலர் அவர்கள் வள்ளற் பெருமான் பேரில் வழக்குத் தொடுத்து அருட்பா மருட்பா போர் நடைபெற்றது சன்மார்க்க உலகம் அறிந்தவொன்றே.

அந்த சூழ்நிலையில், தற்போது சுத்த சன்மார்க்க நெறியில் இந்த நிகழ்வுகள், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கட்டளைப்படியும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோரின் அருளாசியுடன் நடைபெற உள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகச்சியில் கலந்து கொள்வதற்கென, தமிழ்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் சுமார் 50 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள புத்த மத ஆலயத் தலைவர் திரு ரெவ். இஸ்தானி அவர்கள் ஜப்பான் சென்று விட்டு திரும்பியுள்ளார்கள். அவர்கள் இலங்கையில் உலக நலம் விரும்பி, ஆன்மீகக் கால்நடைப் பயணம் மேற்கொண்டு பெருமை சேர்த்தவர்கள். அவர்கள், அவர்களது ஆலயத்தில் உள்ள துறவி லீலாவதி அம்மையார் ஆகியோர் குழு சுமார் 15 பேர்களுடன் ஆகஸ்ட் மாதக் கடைசியில் இலங்கைக்கு இந்த வைபவத்திற்குச் செல்ல உள்ளது.

இலங்கை செல்லும் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த அன்பர்களின் பெயர், பயண நாள் விவரம் தரப்பட்டுள்ளது. (விவரம் வரப்பட்டவரை)

=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=00=0=0=0=0=0=00=0=0=0=0=

திண்டுக்கல் சன்மார்க்க மூத்த உறுப்பினர் திரு செளந்தரராஜன் அவர்கள் 16.8.2010 முதல் 8.9.2010 வரை.

திரு கண்ணப்பன், சம்மாட்டிபுரம், மதுரை 16.8.2010 முதல் 21.8.2010 வரை

அவர் மனைவி திருமதி மீனாம்பிகை மதுரை, 16.8.2010 முதல் 21.8.2010 வரை.

திரு தில்லைநாதன், கடலூர் 16.8.2010 முதல் 21.8.2010 வரை.

திரு பாலுசாமி, ஐராவதநல்லூர், மதுரை 17.8.2010 முதல் 8.9.2010 வரை

திரு பால முருகா கிருஷ்ணானந்தா, திண்டுக்கல் 17.8.2010 முதல் 8.9.2010 வரை

திரு ராமானுஜம், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவன ட்ரஸ்டி, நாராயணபுரம், மதுரை 17.8.2010 முதல் 8.9.2010 வரை.

திரு குழந்தையப்பன், கரட்டடிபாளையம், ஈரோடு மாவட்டம் 28.8.2010 முதல் 8.9.2010

திரு அவினாசியப்பன் கரட்டடிபாளையம், ஈரோடு 28.8.2010 முதல் 8.9.2010

திரு அருணாசலம் கரட்டடிபாளையம், ஈரோடு 28.8.2010 முதல் 8.9.2010 வரை.

திரு சின்னையன், கரட்டடிபாளையம், ஈரோடு 28.8.2010 முதல் 8.9.2010 வரை.

இவ்விழாவினை சிறப்புற நடத்த சீரிய முயற்சிகள் மேற்கொண்டுள்ள சுவிட்சர்லாந்து அன்பர் திரு கேத்தீஸ்வரன் மற்றும் சென்னை அன்பர் திரு லக்ஷ்மணன் ஆகியோர் 15.8.2010 ம் தேதி இலங்கை செல்கின்றனர்.

திரு ஷண்முகம், திருவானைக்கோவில், திருச்சி 17.8.2010 முதல் 8.9.2010 வரை.

அவரது மனைவி திருமது அம்சவல்லி திருச்சி 16.8.2010 முதல் 8.9.2010 வரை.

திருமதி விஜலக்ஷ்மி, கேத்தீஸ்வரனின் மனைவியார், சுவிட்சர்லாந்து, 16.8.2010 முதல் விழா நிகழ்ச்சி நிறைவுறும் வரை.

அவரது மகன் தயானந்தன், 16.8.2010 முதல் விழா நிகழ்ச்சி நிறைவுறும் வரை.

மேலே குறிப்பிடப்பட்ட அன்பர்கள், தவிர பல அன்பர்கள் இவ்விழாவிற்கு வருகை தர உள்ளனர். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கிருபையாலும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் அருள் ஆசியாலும் இந்த திரு அருட் காரியப்பாடுகள் தங்கு தடையின்றி நிறைவேற உலகெங்கிலும் உள்ள சுத்த சன்மார்க்க சங்கத்தார் வேண்டிக் கொள்ளும்படி வேண்டுகின்றோம்.