இலங்கை சாவகச்சேரி வேம்பிராய் சத்திய தருமச்சாலை-சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா செல்லும் அன்பர்களின் கவனத்திற்கு.
=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தீவிர ஈடுபாட்டின் காரணமாக, இலங்கையில் அளவெட்டியில் பிறந்த திரு கேத்தீஸ்வரன் என்ற அன்பர் வடலூருக்கு வந்து, வள்ளல் பெருமான் காலத்தில் உருவாக்கிய சத்திய ஞான சபையினைக் கண்டு வியந்து, அதிசயித்து, பெருமான் அவர்கள், ஜீவர்களுக்கு புறத்திலே விளக்கம் செய்யும் வகையில் அற்புத வடிவில் அருட்பெருஞ் ஜோதியினை ஏற்றிவைத்து, அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மூலம் அகவிளக்கம் பெற வேண்டும் என்ற வகையில் இந்த அற்புதத் திருக் கோவிலை வடித்து வைத்துள்ளாரே என்று எண்ணினார்.
அதன் விளைவு, தாம் பிறந்த நாடான இலங்கையிலே, தமது நாட்டு மக்களுக்கும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் புகட்டி, அவர்களும், இறவாப் பெருநிலை அடையும் வழியினைக் கற்று, வாழ்வில் மேலேற வேண்டும் என்ற எண்ணத்தில், சாவகச்சேரியில், சத்திய ஞான கோட்டத்தினைக் கட்டி அதனை 2006ஆம் ஆண்டிலேயே திறப்பு விழா செய்து விடவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அந்த நாட்டில் அப்போது ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, 2006ஆம் ஆண்டிலேயே சத்திய ஞான கோட்டத் திறப்பு விழா செய்ய இயலவில்லை.
பின்னர் சுமுக சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால், 2010ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர், 2010 ஆகிய மாதங்களில், அந்த நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்று அதற்கென விழாப் பத்திரிக்கையினை வடிவமைத்து, திருச்சியில் தயாரித்து, தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள், வெளி நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் முதலானவற்றிற்கு, அனுப்பி வைக்கும் பொறுப்பினை, மதுரை அன்பரிடம் ஒப்படைத்தார், அங்கிருந்து அனைத்து மாவட்ட சன்மார்க்க சங்கங்கள், மூத்த சன்மார்க்க அன்பர்கள் ஆகியோர் அனைவருக்கும், கடந்த இரண்டு மாதங்களாக, இந்த விழாப் பத்திரிக்கைகள் அனுப்பப்பட்டன.
இலங்கையில் சத்திய ஞான கோட்டத்தில் வைக்கப்படவுள்ள திருநிலைக் கண்ணாடியினை, பெருமான் சித்தி அடைந்த மேட்டுக் குப்பத்துக்குக் கொண்டுவந்து, திருச்சியைச் சேர்ந்த ஒரு அன்பரின் கட்டிடத்தில் வைத்து, கடந்த 29.6.2010ந் தேது முதல் தொடர்ந்து 48 நாட்கள் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளார். அந்நிகழ்ச்சி, திட்டமிட்டபடி, 29.6.2010 அன்று, மேட்டுக் குப்பத்தில் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்திலிருந்து அனைவரையும் இந்த விழாவில் ஒருங்கு படுத்தி இலங்கைக்கு அழைத்துச் சென்று விழாவினை எவ்விதத் தங்கு தடை இல்லாத வகையில் நடத்தி வைக்க வேண்டும் என்ற விதத்தில், இலங்கையில் வள்ளல் பெருமானால் பாடப்பெற்ற திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் ஆகிய இடங்களுக்குக் கொண்டு சென்று வழிபாடாற்ற வேண்டும் என்று, சென்னையில் ஒரு அன்பர் மூலம் இலங்கையில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்களுக்கு விமான டிக்கட்டுக்கள் பெறுவதற்கும், ஏனைய ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்ட சென்னை அன்பர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
அதன்படி, கீழ்க்காணும் 3 கட்டங்களாக, இந்த பயணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏ குரூப் -17.8.2010 முதல் 8.9.2010 முடிய
பி குரூப் -17.8.2010 முதல் 27.8.2010 முடிய
சி குரூப் - 27.8.2010 முதல் 8.9.2010 முடிய
ஆரம்பம் முதல் இறுதி நிகழ்ச்சி வரை வரும் அன்பர்களின் வசதிக்காக, 17.8.2010 அன்று காலை 7.00 மணிக்கு சென்னையில் விமானம் ஏறி, இலங்கை சென்று 8.9.2010 அன்று இறுதி நாள் நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் அங்கு இருந்து பங்கேற்றுவிட்டு, இந்தியா திரும்புவதற்கு வசதியாக (ஏ) குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இடையில் திரும்பி வருவதற்கு ஒரு சிலர் .விரும்பினால், அவர்களின் வசதிக்காக 17.8.2010 இலங்கைக்குச் சென்று அவர்கள் 27.8.2010 அன்று இந்தியா திரும்பி வரலாம். இதற்கு வாய்ப்பாக (பி) குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இடையில் இலங்கைக்கு 27.8.2010 வந்து, இறுதி நாளான 7.9.2010 வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, 8.9.2010 அன்று திரும்பி வருபவர்களுக்கு வாய்ப்பாக (சி) குரூப் என ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தேதி வரை 9 நபர்கள் மட்டுமே, விமான டிக்கட்டுக்கு உண்டான தொகை கட்டி வருகை விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில அன்பர்கள், தமக்கு வாய்ப்பு உள்ள நாட்களில் அங்கு வருகை தருவதாக தகவல் கூறுகின்றனர்
வள்ளற் பெருமான் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவிலான அன்பர்கள் இலங்கைக்கு வந்து முழு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்பது திரு கேத்தீஸ்வரனின் அவா ஆகும்..
. மேலே குறிப்பிடப்பட்ட ஏ, பி, சி, குரூப் களில் வரும் அன்பர்களுக்கு இலங்கையில் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்று, கவனித்துக் கொள்வதற்கு அன்பர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் மூலம், இலங்கையில், போக்குவரத்து வசதி, உணவு, தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்து தர விழாக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். தனித்தனியே அங்கு வரும்போது அசெளகரியம், வசதிக் குறைவு ஏற்படலாம். இலங்கை விமான நிலையத்திலிருந்து உள்ளூருக்குச் செல்ல வேண்டுமெனில் (M.O.D) சான்று பெற்றுத் தான் உள்ளே செல்ல வேண்டும் என தற்போது தகவல் வரப் பெற்றுள்ளது. அங்கு செல்லும் அன்பர்கள், இதனையும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகையால் இலங்கைக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து விருப்பம் உள்ள அன்பர்கள், பாஸ்போர்ட் நகலுடன், உடனடியாக, சென்னையில் உள்ள அன்பர் (செல் எண் 94437 – 64179) தொடர்பு கொண்டு பணம் செலுத்தி இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியினை மேலு சிறப்புறச் செய்ய வேண்டுமாய் விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். தாமதம் ஆக ஆக, விமான செலவு கூடும் வாய்ப்பு உள்ளது.
தனித்தனியே அங்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள், நேரடியாக, இலங்கை விமான நிலையத்திற்கு வந்தவுடன், சாவகச்சேரிக்கு நேரடியாக வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.