Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடி-29.6.2010-மேட்டுக்குப்பத்தில் 48 நாட்கள் வழிபாடு துவக்கம்.

இலங்கை சாவகச்சேரி அருகே வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்புவிழா

கொண்டு செல்ல வேண்டிய திரு நிலைக் கண்ணாடியின் முன்பாக 48 நாட்கள் (ஒரு மண்டலம்) மேட்டுக்குப்பத்தில் பூஜை செய்தல்.

துவக்க நாள் 29.6.2010 (செவ்வாய்).

-0-0-0-0-00-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

இலங்கை சாவகச்சேரி அருகேயுள்ள வேம்பிராயில் வரும் ஆகஸ்ட், 2010 மற்றும்

செப்டம்பர் 2010 ஆகிய மாதங்களில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம்

திறக்கப்பட உள்ளன. அங்கு கொண்டு செல்லப்பட உள்ள திருநிலைக் கண்ணாடி, தற்போது,

வடலூரை அடுத்த மேட்டுக்குப்பத்தில் (திருச்சி அன்பர்) திரு ஷண்முகத்துக்குச் சொந்தமான

கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 29.6.2010 (செவ்வாய்க்கிழமை) அன்று, காலை முதல்

தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது.

இது குறித்து, தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான சன்மார்க்க சங்கங்கள் / மற்றும் முக்கிய

சன்மார்க்க அன்பர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி திரு அருட்பா முற்றோதலில் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி

தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்வழிபாடு, 15.8.2010 வரையில் தொடர்ந்து நடைபெறும்.

அதன் பின்னர், 16.8.2010 அன்று வள்ளற் பெருமானார் வாழ்ந்த இடங்களுக்கு

16.8.2010 அன்று அத் திருநிலைக் கண்ணாடி கொண்டு செல்லப்பட்டு,

17.8.2010 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம், இலங்கைக்குக் கொண்டு

செல்லப்பட வுள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பும்

(பாஸ்போர்ட் வைத்திருக்கும்)சன்மார்க்க அன்பர்கள், முன்கூட்டியே விமான டிக்கட் எடுத்து

வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது