இலங்கை சாவகச்சேரி வேம்பிராயில் சத்திய தருமச் சாலை மற்றும்
சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி நிரல்.
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
இலங்கை சாவகச்சேரியை அடுத்த வேம்பிராயில் 2010 செப்டம்பர் மாத பூச நாளன்று,
சத்திய ஞான கோட்டம் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னர் சத்திய தருமச் சாலை திறப்பு விழாவும் உள்ளது.
29.6.2010 அன்று இந்தியாவில் வடலூர், மேட்டுக் குப்பத்தில் இதற்கான
முன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.
அது பற்றிய தேதி வாரியான நிகழ்ச்சி நிரல், இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில்
வலது ஓரத்தில், கீழ்புறம் Latest Docts/Books என்ற தலைப்பின் கீழ்
8.5.2010 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அன்பர்கள் அந்த விரிவான நிகழ்ச்சி நிரலை, டவுன் லோடு செய்து (download)
காணும்படியும், இலங்கையில் நடைபெற உள்ள இந்தச் சிறப்பு
நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெற்றுச் சிறப்பித்து,
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரர்களாகும்படி
அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
வள்ளல் அடிமை தயாநேயன் கனகசபாபதி கேதீஸ்வரன்,
தயவுத் திருமதி கே. விஜயலட்சுமி,
கே. தயானந்தன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள்.