Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Arutperunjothi Agaval Lines 961-962 Explanatory Note by Swami Saravanananada, Dindigul.
திரு அருட்பா..அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 961-962.

உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.

----------------------------------------------------------------------------------------

எங்கே கருணை இயற்கையி லுள்ளன

அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

----------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

     கடவுள் எங்கும் விளங்கிக் கொண்டேதான் உள்ளார் என்பது பொய்யல்ல. இருந்தாலும், எங்காவது நாம் கடவுளை உள்ளவாறு காணமுடிகின்றதா என்றால், எங்கும் எவ்வளவு காலம் காண முயன்றும், ஏதோ எப்படியோ ஓரொரு தோற்றமாயுளப்பண்பாட்டிற்குத்தக, உருவாய், ஒளியாய், உணர்வாய் வெளியாகி மறைந்துள்ளனவேயன்றி, கடவுள் உண்மை இதுதான் என்று விளங்கிடவில்லையாம். அப்படித் தோன்றிச் சிலரை பரவசப்படுத்தி மறைந்து போன எதுவும் கடவுளின் உண்மையான இயல் வடிவம் என்று கூறவே முடியாது. 

         எந்த இடத்தில் கருணை அல்லது மெய்யருள் உள்ளதோ, அங்கே, எப்போதும் நம் பதியிருக்கின்றதும் உண்மையே. ஆண்டவரே இல்லாத சிற்றணு அளவு இடம்கூட இல்லையே இந்த அகண்ட பெருவெளியில் .. ஆகையால், எங்கெங்கும் இயற்கையில் அருள் ஒளியாய்ச் சிவ ஜோதியாய்க் கடவுள் இருந்து கொண்டேதான் இருக்கின்றார் என்பது மெய்யே.  அப்படி எங்கும் அருட்பதி இருந்தும்கூட அருளாலே அறியப்படாதவரை எங்கும் உள்ளபடி காணமுடிகின்றதில்லையாம். எனவே, எங்கே கருணை வெளிப்பட்டு விளங்குகின்றதோ அங்கேதான் அந்தக் கருணைப் பரம்பொருளும் வெளியாகி விளங்குவது உண்மையாகும். எப்படி எங்கே அக் கருணை அல்லது தயவு வெளிப்பட்டு விளங்கக் கூடியதாயிருக்கின்றது என்றால், மனிதப் பிறப்பில், சிரநடு சிற்றம்பலத்தில், சுத்த தயவு மயமாய் விளங்கும் ஆன்மாவில், உன்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதியாய் எழுந்தருளி விளங்குகின்றதாம். அந்நிலையில் விளங்கும்தானே எங்கெங்கும் இருந்து விளங்குவதாகவும் அறியப்படும். இது உண்மைக் கடவுட்காட்சி., தயவு மயமாவோர் என்றும் எங்கும் காணும் உண்மைக் கடவுட் காட்சி இதுவாகும்.
20150325_085241.jpg

20150325_085241.jpg

vlcsnap-2019-06-11-06h42m03s366.png

vlcsnap-2019-06-11-06h42m03s366.png

Download: