Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
சன்மார்க்கப் பயிற்சி நான்கு...சுவாமி சரவணானந்தா.
1. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான், நமது உண்மையான அகவடிவம் என்பதை தெளிவு செய்து கொள்ளல்.

2. அந்த அக உணர்வு கெடாமல், அருள் வண்ணமாகவே சிந்தனையும், சொல்லும், செயலும் வெளிப்படுத்திக் கொண்டிருத்தல்.

3. அருள் அனுபவ வாழ்வையே இலட்சியமாய்க் கொண்டு பொறிபுலன் இச்சையை விலக்குதல்.

4. நமது ஆதிமூல நிலை, நடுத்தலை உள்ளிருக்கும் அருட்ஜோதி ஆன்ம அணுவாய் இருக்கின்றது. அங்கிருந்து இத்தேகத்தில் பூர்ணமாய் வியாபித்துள்ளோம். ஆகையால், அவ்வான்ம அணுவை மனதினால் உறுதியாய்ப் பற்றி அதுவாகி நிலைத்தல் வேண்டும். அங்கிருந்து தான் அருளின்ப வாழ்வு வாழ்தல் வேண்டும்.

       இந்நான்கு பயிற்சியும் மேற்கொண்டு வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சார்பு கொண்டவர்களாவோம். அதனால் சச்சிதானந்த வடிவில், மரணமில்லாப் பேரின்ப வாழ்வில் என்றும் வாழ்வோம்.

         இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணை.
IMG_20171002_105545.jpg

IMG_20171002_105545.jpg