Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கிதமாலை பதிகத்துக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருள் உரை.
இங்கிதமாலை பாடல் எண்.7..

அம்மால் அயனும் காண் பரியீர்க்கு அமரும் பதிதான் யாதென்றேன்
இம்மால் உடையாய் ஒற்றுதற்கோர் எச்ச மதுகண்டு அறிஎன்றார்
செம்மால் இதுஒன்(று) என்றேன் திருவே புரிமேற் சேர்கின்ற
எம்மால் மற்றொன்(று) என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.

                                                 ....திருவருட்பிரகாச வள்ளலார்...

0000000000000000000000000000000000000000000000000000000000000000

மேற்காணும் பாடலுக்கு உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000

    நித்தியமாய் தோற்றரிதாய் உள்ளது கடவுட் ஜோதி. ஆனால், இவ்வுலகில் தோன்றி விளங்கிக் கொண்டுள்ள எதுவும், எவரும் அவ் இறையுண்மையி அறியார்,  அத்தோற்றங்களுக்கும் தோற்றுவிக்கப்பட்டவை குறிப்பிட்ட காலம் வரை விளங்கிக் கொண்டிருக்கவும், உதவுகின்ற தெய்வங்களாகிய பிரமனும், திருமாலும் கூட அந்த நித்திய இறைவனை அறியார். அவர் தான் இப்போது இந்த மனிதப் பிறப்பில், அருள் பாலிக்க, ஒற்றித் தியாகராக வந்து, பிச்சைப் பெருமானாக இந்த ஆன்மத் தலைவி முன் நிற்கிறார். இவள் அவரை நோக்கி, “நீர் தங்கும் இடம் எது..என்று கேட்கிறாள். அதற்கு அவர் “ஒற்று, என்பதற்கு, ஓர் (வினை) எச்சம் ஆகிய (இ) சேர்த்து, அது ஒற்றி என அறிவாய்” என்கின்றார். அதாவது மெய்யறிவு விளங்கும் நமது ஆன்மாவே இப்போது திருவொற்றி ஆகத் திகழ்கின்றது. இதிலேதான் கடவுள் அனுபவப்படவுள்ளார். பின்னும் சீரான ஒன்று எதுவோ ? அது இது என்று தெரிவிக்க வேண்டும் என்கின்றாள். புரி என்பதற்கு முன்னாக, அவர்க்கு ஒரு சிறப்புப் பெயராக விளங்கும், ஆதி என்பதைச் சேர்த்து ஆதிபுரி என அறிந்து கொள்வாய் என்கின்றார். திரு வொற்றிக்கு இந்த ஆதிபுரி என்பது மற்றொரு பெயராகும்.

    அருள் ஆண்டவர் தங்கி விளங்குகின்ற மெய்ப்பதி ஆன்மாவே. அது தான் தொருவொற்றி என்பதும். மேலும் இவ்வான்ம சிற்றணுவே, நம் கருவின் ஆதியான முதல் அணுவாய்த் தோற்றி, உயிர் உடம்பை ஏற்றுள்ளதால், இக்கடவுள் நிலையம் ஆதிபுரி என்றும் ஆம்.

IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg