Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 113. பன்னிரண்டாம் அதிகாரம்..மெய் இந்திரிய ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
கையறவி லாது கருணைவளர் நற்பணியே
வையமிதி லென்றும் வளர்.

=0==0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     கையறவு = செயலறச் சோம்பி இருத்தல். ஆகையால் கையறவில்லாது என்பது, சோம்பலின்றி விழிப்போடு செயல் புரிந்து கொண்டு இருத்தல் வேண்டும் என்பதாம்.

     அந்தச் செயலும், உலகில் எப்பொழுதும் தயை வளர் நல்ல செயலாகவே இருக்க வேண்டும். இவ்வுடல் சுறுசுறுப்போடு தயாபணியில் ஈடுபட்டிருந்தால்தான் அகத்திலிருந்து திருவருள் உணர்வு பெருகி வளர்ந்து தேகமெல்லாம் பரவி சுத்த இன்ப நிலை ஏற்கச் செய்யவும்.
vallalar 021.jpg

vallalar 021.jpg