Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.57. ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.விசார சங்கற்பம்..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.577.
ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.
விசார சங்கற்பம்.
சுவாமி சரவணானந்தா.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0

கற்றதனைக் கைக்கொண்டு கண்ணுறங்கா தன்புவளர்
பற்றதுவே சங்கற்பம் பார். (தயவுக் குறள் எண். 577)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

எந்த மெய்ப்பொருளாகிய தயா சோதியைக் கற்க வேண்டுமோ அதனை உள்ளூறக் கற்று உணர்ந்து கொண்டு நழுவவிடாது தயை வளர் பணி புரிந்து கொண்டிருத்தல் வேண்டும். இப்படி மெய்ப்பொருளைப் பற்றறப் பற்றி நிற்பதுவே உண்மையான சங்கற்பமாம்.

“கண்ணுறங்கா” என்பது அக விழிப்பு நிலையைக் குறிப்பது. கடவுட் சோதியை மறவாதிருப்பதுவே கண்ணுறங்கா அல்லது அறிதுயில் நிலையாம்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ற திருக்குறளுக்கு சுத்த சன்மார்க்க விளக்கம் தருவது இக்குறள்.

IMG_20160406_120452.jpg

IMG_20160406_120452.jpg