Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.575 ஐம்பத்தெட்டாம் அதிகாரம் விசார சங்கற்பம். சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.575.
அதிகாரம் எண்.58.
விசார சங்கற்பம்.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

சத்தாம் பொருளை தயாவிசா ரத்தாலே
கற்றார் பகரத்திற் கண்டு.                   (தயவுக் குறள் எண்.575).

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     கற்றார் (கற்று + ஆர்) அறிந்து கொண்டு உட்பொருந்தி நிறைவெய்தி இருத்தல்.

     நிலையாய் விளங்கும் பரம்பொருளை நம் சிரமத்திய பகரவடிவக் குழியினின்று, சத்விசாரத்தால் கல்லி (தோண்டி) வெளிக் கொணர்ந்து அத்னோடு சார்ந்து கலந்து தயை விளங்கத் திகழ்தல் விசார சங்கற்பமாம்.

     கற்று ஆர்தலே, சங்கற்பம் என்ற பொருளீந்து நிற்கின்றதாம்.

     பகரம் = ‘ப’ என்ற எழுத்து அழகு, பிரதியாம். ஆகையால் இப்பகரம், நமது சிரமத்திய பகர வடிவக் குழி என்பதோடு, அங்கு வெளிப்பட்டிலங்கும் தயா ஜோதியாம் எழில் பிரதி பிம்பத்தையும் குறிப்பதாக அறியலாகும்.
IMG_20160608_131554.jpg

IMG_20160608_131554.jpg