Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.574 ஐம்பத்தெட்டாம் அதிகாரம்..விசார சங்கற்பம்..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண். 574.
அதிகாரம் எண்.58.
விசார சங்கற்பம்.
சுவாமி சரவணானந்தா

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0

அழியாத் தயாசோதி ஆகமுறக் கொண்டு
ஒழியா திருக்கு முணர்வு.             (தயவுக் குறள் எண். 574)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     தயா சோதியாகிய கடவுட் சக்தி அழிவற்றது, நித்தியமானது. சத்விசாரத்தால் அறிந்து கொண்ட இந்த உண்மையைச் செம்மையாக நெஞ்சில் இருத்தி, தேகேந்திரிய உணர்வில் சதா நிரப்பிக் கொண்டு விளங்குவதற்கு இச்சங்கற்பம் உதவுகின்றது.

     இத்தயா ஜோதி உணர்வாகிய சங்கற்பம், உலகியல் வாழ்வில், தேகச் செயலில் விளங்குவதால்தான் ஒழிவர அனுபவப்படுகின்றதாம்.மற்றபடி இச்சோதியை சிந்தித்துப் பொய்ப் பாவனை செய்து நிட்டையில் அழுந்துவதால் நித்தியானுபவம் உண்டாகாது.

ஆகம் = உள்ளம், உடல்.
IMG_20160409_212446.jpg

IMG_20160409_212446.jpg