Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மார்கழி மாதத்தின் சிறப்பு ... சுவாமி சரவணானந்தா.
மார்கழி மாதத்தின் சிறப்பு

சுவாமி சரவணானந்தா.

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

     ஒவ்வொரு ஆண்டிலும், ஈற்றில் வருகின்ற இம்மார்கழி மாதம் முழுமையும்
அமுத காலமாகவே கொள்ளப்படும். இவ்வேளையில் அகத்தும், புறத்தும்
அருளமுது சக்தி வியாபகம் அதிகரித்து விளங்கலால், அருள் விழையும் அறிவு
படைத்த மக்கள் யாவரும், துயிலெழுந்து, அகப்புறத் தூய்மையுடன், தயா தெய்வ
வழிபாடு செய்தல் வேண்டும்.  இப்படிச் செய்தால் அன்பும் அறிவும் பெருகிட
நல்லின்ப வாழ்வு தழைத்திடும்.

     மேற்படி உண்மைகளையுணர்ந்தே ஆன்றோர், இம்மாதத்தை தெய்வ
வழிபாட்டிற்குச் சிறந்த ஒன்றாக ஏற்படுத்தித் திருப்பள்ளி எழுச்சி பாடி,
பள்ளி கொண்டிருக்கும் உள்ளொளியை எழுப்பவும், திருப்பாவை பாடி
உட்பாவகப் பொருளை யொன்றவும், திருவெம்பாவை பாடி சிற்றம்பலத்தான்
ஆடல் கண்டிருக்கவும் உபாயஞ் செய்தனர். அவர்களின் உட்கோள் உபாயக்
குறிக்கோள் உணர்ந்து உலகியலைத் தயாவியலாக்கிக் கொண்டு வாழவேண்டும்
நாம்.
20141217_112812.jpg

20141217_112812.jpg