தினம் ஒரு தயவுக்குறள்-எண்.700.
posted 15 months ago
23 Feb 2011 11:42:21 GMT 11:42:21 AM
1201 views
தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
10
|
தயாபெருஞ் சோதிநிலை சச்சிதா னந்தம்
தியாகவாழ் வேற்றுத் திகழ்.
|
700
|
குறள் விளக்கம்.
தயவின் முதிர்ச்சியே தியாக உருக் கொள்வது. ஆன்ம நிலையத்திருந்து இத்தயாவொளி பெருகி அனுபவப்படத் தியாக வாழ்வு ஏற்க வேண்டியுள்ளது. இத்தயா ஒளி அனுபவமே முடிவில் சச்சிதானந்தப் பேரின்ப அனுபவமாக விளங்குவதாம்.
சத்து-சுத்த தேக நிலையையும், சித்து-ஞான தேக நிலையையும், ஆனந்தம்-பிரணவ தேக நிலையையும் உணர்த்துவன. இதுவே தயா பெருஞ்சோதிப் பேரின்ப வடிவம்.
சுத்த தயா சன்மார்க்கத்தின் குறிக்கோளாக உள்ள தயா பெருஞ்சோதிப் பேரின்ப வடிவைப் பெற்று என்றும் வாழ்வதுவே இங்கு சுத்த இன்ப நிலையாக வழங்கப்படுவது.
அகத்தே உள்ள, தயா பெருஞ்சோதி சக்தியே அனக முற்றுத் திகழும்போது, நாம் தியாக வண்ண வடிவொடு சச்சிதானந்தமாய் விளங்குவோம்.
=0=0=0=0=0
மூன்றாம் பிரிவாகிய இன்ப இயல் விளக்கக் குறிப்புடன் நிறைவுற்றது.
தயவுக் குறள் முற்றிற்று.
தயவு.