தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
8 |
ஒன்றாம் கடவுளை ஒன்றும் அருள்மார்க்கம் நன்றாம் பொதுநெறி நாட்டு. |
688 |
குறள் விளக்கம்
எல்லா உலகத் தெல்லா உயிர்க்கும் இறைவன் ஒருவணே. அது நாம் என்ற அருளுணர்வால், அதுவாகி, அருள் வண்ணமாய்த் திகழ்ந்து நின்று வாழ்வதே இறைநிலையை அடையும் முறை. இவ்வருள் ஒன்றுதனே யாவருக்கும் உரிய பொது நெறி, நல்வழி, சன்மார்க்கம், உண்மை நெறி எனப்படுவது.
இப்பெரு நெறி செல்வோர், முன் கண் மூடிச் சென்ற பழ நெறிகளில் உள்ள, குற்றங்குறைகளை, அருட் சோதி ஒளியினால் நன்கு கண்டு விலகிச் சென்று மேல்நிலையுற்று பேரின்பானுபவப் பெருவாழ்வு வாழ்வார்கள்.
Write a comment